English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
inaugurate
v. தொடங்கிவை, பணியமர்வுத் தொடக்கஞ் செய், விழாவினை முறையாற்றித் தொடங்கு, கட்டிடம் முதலியவற்றைப் பொதுமக்களுக்குத் தொடங்கிவை, முதன் முதல் காட்சிப்படுத்து.
inauspicious
a. தீயசகுனம் உடைய, நல்லெதிர்ப்பற்ற, மங்கலமற்ற, தீயதான.
inboard
a. (கப்) கப்பலின் பக்கங்களிடையே, கப்பல் மையத்தில்.
inborn
a. இயல்பாயமைந்துள்ள, உடன்பிறந்த, உள்ளிருந்து தோன்றிய.
inbreathe
v. மூச்சு உள்வாங்கு பண்பை ஈர்த்து உட்கொள்.
inbred
a. இயல்பான, உடன் பிறந்த, இயற்கையான உள்ளார்ந்த.
inbreeding
n. உட்குழு மண உறவு முறை, இனத்தகப் பாலிணையளவு முறை.
Inca
n. தென்அமெரிக்காவில் பெரு என்ற நாட்டை ஸ்பானியர்கள் கைப்பற்றுவதற்குமுன் ஆட்சியில் இருந்த பேரரசர், பெரு நாட்டின் ஆளும் இனத்தவருள் ஒருவர்.
incalculable
a. கணித்தற்குரிய, மிகப்பெரிய, முன்னரே மதிப்பிட்டறிய முடியாத, வரையறுத்துணர முடியாத, திடப உறுதியற்ற, நிலை உறுதியற்ற.
incandesce
v. வெப்பத்தோடு ஒளிவிடு, வெண்சுடர் ஒளி வீசி எரியச்செய்.
incandescence
n. வெள்ளொளி.
incandescent
a. வெண்சுடர் வீசி எரிகிற, வெப்பத்தோடு ஒளிவிடுகிற., பளபளப்பாக ஒளிவீசுகிற, மின்விளக்கு முதலியவற்றின் வகையில் இழைகள் சூடாவதால் ஒளிவீசுகிற.
incantation
n. மந்திரிப்பு, மந்திர உச்சரிப்பு, மந்திரம், மந்திர வாசகம்.
incapable
a. திறமையற்ற, ஆற்றல் குறைபாடுடைய, மேற்கொள்ளும் தன்மையற்ற, தீமை வகையில் இடங்கொடாத.
incapacitate
v. தகுதியற்றதாகச் செய், தகைகேடு உண்டுபண்ணு, ஏலாமற் செய்.
incapacity
n. திறமையின்மை, தகுதியின்மை, சோர்வு, வலுவின்மை, சட்டப்படியான தகுதிக்குறைபாடு.
incaradine
a. (செய்) தசை நிறமுடைய, சாய வகையில் சதை வண்ணமுடைய, மிகச் சிவப்பான.
incarcerate
v. சிறைப்படுத்து, அடைத்துவை.
incarnate
-1 a. தசையுருத்தாங்கிய, உடலெடுத்த, மனித உரு ஏந்திய, பண்பின் கண்கூடான உருவமான, (வினை) தசை உருமேற்கொள், திருவுருக்கொள்,. மனிதப் பிறவியெடு, திருவவதாரம் செய், கருத்துக்கு வடிவம் கொடு, பண்பின் திருவுருவாக்கு.
incarnation
n. திருப்பிறப்பு மேற்கொள்ளுதல், திருவவதாரம், மனித உருவேற்பு, தசை உருவேற்பு, பண்பின் திருவுரு, பண்புருவகம்.