English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
illuminate
v. வளக்கேற்று, வெளிச்சம் காட்டு, ஒளி விளக்கம் செய்,ங மூளை தௌிவி, மயக்கநீக்கு, விளக்கம் அளி, பொருளை விளக்கு, ஒளிரச்செய், விழாக்கோல ஒளிவிளக்க ஒப்பனை செய், கையெழுத்துச் சுவடியின் முதலெழுத்து முதலியவை வகையில் பொன் வெள்ளி மெருகிடு, வண்ண மெருகூட்டு.
illuminati
n. pl. அறிவொளி பெற்றோர், புத்தெழுச்சி பெற்ற பல 1க்ஷ்-ஆம் நுற்றாண்டுக் கழக உறுப்பினர்களக்கு வழங்கப்பட்ட பெயர்.
illumine
v. ஒளி விளக்கம் அளி, ஆன்மிக அறிவொளியூட்டு, ஒளிர்வி.
illusion
n. மயக்கம், மருட்சி, பொய்த்தோற்றம், மாயத்தோற்றம், போலி எண்ணம், போலிக்கருத்து, போலி நம்பிக்கை, விழிமாறாட்டத் தோற்றம்,. ஏமாற்றம், மிக நுட்பமான மெல்லிய பளிங்கனைய பட்டுநுல் வலைத்துணி.
illusionist
n. மாயாவாதி, புறவுலகு வெறும பொய் என்னுங் கோட்பாட்டாளர், பொய்த்தோற்றங்கள் உண்டாக்குபவர், மாயவித்தைக்காரர்.
illusive
a. ஏமாறச் செய்கிற, போலித் தோற்றமான, மாயமான, மருட்சி தருகிற.
illusory
a. பொய்த்தோற்றங்களால் ஏமாற்றுகிற, மருட்சி தருகிற.
illustrate
v. தௌிவாக்கு விளக்கு, எடுத்துக்காட்டு வாயிலாக விளக்கமளி, ஒப்புமைகாட்டித் தௌிவாக்கு, படங்கள் மூலம் விளக்கு, படங்களெழுதி அழுகுபடுத்து, உருவரைகளால் அழகொப்பனை செய்.
illustration
n. தௌிவாக்குதல், எடுத்துக்காட்டு, விளக்கப் படம்.
illustrative
a. விளக்குகிற, எடுத்துக்காட்டாகப் பயன்படுகிற.
illustrious
a. புகழ்பெற்ற, முதன்மையான, சிறப்புவாய்ந்த, மேதக்க, தேசுடைய.
ima;ginable
a. கற்பனை செய்யப்படத்தக்க, மனத்தினால் பாவிக்கப்படத்தக்க, நினைத்துப்பார்க்கக்கூடிய.
image
n. உருவம், படிவம், உருவச்சிலை, படிமம், புனிதர் திருவுருவச்சிலை, ஒத்த வடிவம், உருவச்சாயல், உருமாதிரி, எதிர் உரு, எதிர் படிவம், பளிங்கில் தெரியும் நிழலுரு, உவம ருவக அணி, கருத்துரு, கருத்துப்படிவம், மனச்சாட்சித் தோற்றம, (வினை) உருவங்கொடு, படந்தீட்டு, மனத்தில் உருவங் கறிபித்துக்காண்,. நிழலுருப்படுத்திக்காட்டு., உரு மாதிரியாய் அமை, மாதிரி எடுத்துக் காட்டாகப் பயன்படு, விளங்க விரித்துரை.
image-worship
n. உருவ வழியாடு.
imagery
n. உருவங்களின் தொகுதி, உருவங்கள், உவம உருவக அணி வகை, இலக்கிய அணி, நினைவுக்காட்சி, மனத்தகத் தோற்றம், புனைவாற்றல் கற்பனை.
imaginal
a. (பூச்) நிறை வளர்ச்சியடைந்த.
imaginary
a. கற்பனையான, உளதாயிராத, புறமய்ம்மையற்ற, (கண) கற்பிக்கப்பட்ட, கணிப்பளவில் உளதாயிருப்பதாகக் கொள்ளப்படுகிற.
imagination
n. கற்பனை செய்தல், புனைவாற்றல், கற்பனைத்திறம், கலைப்புனைவுத்திறம், பாவனை, போலி எண்ணம், கட்டற்ற புனைவு, மாயத்தோற்றம், வீண் எண்ணம், போலிப்புனைவு, மனத்தின் படைப்புத்திறன்.
imaginative
a. கற்பனைத்திறத்துக்குரிய, கற்பனைத்திறத்தினைப் பயன்படுத்தும் பாங்குள்ள, மிகுகற்பனைத்திறம் வாய்ந்த.
imagist
n. கவிதைப்புனைவியல் திட்பக்குழுவினர், உணர்ச்சி வசப்படாமல் சரியான சொற்களை ஆண்டு மிகத் தௌிவாகவும் செறிவாகவும் பாடல்களியற்ற வேண்டுமென்பதை நோக்கமாகக் கொண்ட 20-ஆம் நுற்றாண்டுத் தொடக்ககாலக் கவிஞர்குழுவினர்.