English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
imago
n. முற்றுரு, பூச்சி வாழ்க்கையில் எல்லா மாறுதல்களையும் அடைந்தபிறகு இறுதியாக ஏற்படும் முழு நிறையான நிலை.
imam, imaum
பள்ளிவாசலுக்குரிய இஸ்லாமிய சமய குரு, பள்ளிவாசல் வழிபாட்டு முதல்வர், இஸ்லாமியத் தலைவர்களின் பட்டப்பெயர்.
imbecile
n. பிறப்பிலேயே மூளைச்சோர்வுடையவர், ஏலா அறிவிலி, தன்னிலையற்றவர், (பெயரடை) இயல்பான அறிவுமுடமுடை, ஏலா மூளைத்தளர்சசியுடைய, தன்னிலையற்ற.
imbibe
v. உள்ளீர்த்துக்கொள், ஈர உறிஞ்சு, காற்று உள்வாங்கு, மூச்சு உள்வாங்கு,உட்கொண்டு செரிக்கவை, நீர் பருகு, குடி, மனத்தில் வாங்கிக்கொள், கருத்துக்களை ஏற்றமை.
imbricate
v. கவிந்து பாவு, மோட்டில் ஓடுகள் போன்று ஒன்றன் மேற் சென்று ஒன்று கவியும்படியாகப் பரப்பி அடுக்கு, இலைகள் மீன் செதிள்கள் போன்று பரவலாக அமைவி.
imbroglio
n. குழப்பநிலை, அரசயில் சிக்கல்நிலை, நாடக நெருக்கடிக் கட்டநிலை, இசைத்துறையில்ட குழப்பநிலைபோலத் தோற்றமளிக்கும்படி வகுத்தமைக்கப்படும் நிலை.
imbrue
v. குருதி முதலியவற்றின் கறைபடுவி, நீர்மத்தில் தோய்வி.
imbrute
v. விலங்குபோல் ஆக்கு, விலங்குத்தன்மையூட்டு.
imbue,
சாயம்தோய்வி, ஊறிச்செறியவை, ஊடுருவி பரவச்செய், உள்நின்று இயங்குவி, ஊக்குவி.
imitable
a. பார்த்துப் பின்பற்றத்தக்க, போன்று செய்யத்தக்க.
imitate
v. பின்பற்று, பார்த்துப் பழகு, போலிசெய், ஏறக்குறைய ஒப்புடையதாகச் செய்யமுயலு, போன்று நடி, போன்று நட, போலி ஒப்புமைகாட்டி நடி, நையாண்டி நடிப்புச்செய்.
imitation
n. பார்த்துப் பின்பற்றுதல், போலசெய்தல், போலி காட்டி நடிக்கும் நடிப்பு, போலி, போலித்தோற்றம், போலிப்பொருள், இரண்டாந்தரச் செயற்டகைப்பொருள், ஏமாற்றுச் சரக்கு, புறத்தோற்ற மட்டுமே ஒத்த அகப்பண்பற்ற பொருள், (பெயரடை) போலியான, புறப்பகட்டானந, புறநடிப்பியல்புடைய, அகப்பண்பற்றுப் புறத்தோற்ற மட்டுமே ஒத்த, செயற்டகையான, பார்த்துச் செய்யப்பட்ட, இரண்டாந் தரமான, பூவேலைத் துன்னல் வகையில் இயந்திரத்தால் செய்யப்பட்ட.
imitative
a. பின்பற்றுகின்ற, பின்பற்றும் இயல்புடைய, போன்று செய்கின்ற, போலியாக நடிக்கின்ற, மாதிரியைப் பின்பற்றி அமைக்கப்பட்ட, போலியான.
imjpersonal
a. ஆளைக்குறிக்காத. பண்புகுறித்த, (இலக்) ஆட்சார்பற்ற, னி மனிதரைச் சுட்டாத, பொதுமுறையான, (இலக்) வினை வகையில் வினைமுதல் சுட்டாத, பொதுச்சுட்டான.
immaculate
a. மாசற்ற, கறையற்ற, களங்கமற்ற, விழுத்தூய்மைவாய்ந்த.
immanence, immenency
உள்ளுறைவியல்பு, பாலில் நெய்போல் இயல்பாக எங்கும் ஊடுருவிப் பரவியுள்ள இறைவனின் தன்மை.
immanenet
a. உள்ளார்ந்த, இயல்பாயுள்ள, இயற்கையாய் அமைந்திருக்கிற, நிலைபேறான தன்மையில் படைப்பு முழுமையும் பரவி நிலவியுள்ள.
immanentism
n. எங்கும நிலவியுள்ள கடவுள் பற்றிய நம்பிக்கை, இயல்பாக ஊடுருவிப் பரந்தியலும் இறைமை பற்றிய கோட்பாடு.
Immanuel
n. இயேசுநாதரைக் குறித்த பெயர்.
immaterial
a. பொருள் தன்மையில்லாத, உடலற்ற, உடல் சார்பில்லாதம, ஆவியியலான, நுண்ணியலான, கருத்தியலான, புறக்கணிக்கத்தக்க, முக்கியமல்லாத.