English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hog
n. பன்றி, இறைச்சிக்காக விதையடித்து வளர்க்கப்படும் ஆண்பன்றி, அழுக்கேறியவன், கீழ்மகன், நாகரிகமற்றவர், பட்டிக்காட்டான், பேராவற்காரன், முதல் கத்திரிப்புக்கு முற்பட்ட ஒரு வயது ஆடு, ஒரு வயது விலங்கு, (வி.) முதுகை உயர்த்து, முதுகை வில்போல் வளை, பிடரிமயிரைக் குறுக்கே வெட்டு, பன்றிப்போலப் பற்று, பன்றிப்போலத் தின்னு, பன்றி போல நடந்துகொள், முரட்டுதனமாக நடத்து.
hog-fish
n. தலையில் பன்றிமுள் போன்ற அமைப்புடைய மீன்வகை.
hog-mane
n. குறுகத்தறித்த குதிரையின் பிடரிமயிர்.
hog-wash
n. அடுப்படிச் சாக்கடை.
hogback
n. நடுவே முகட்டையுடைய கொடும்பாறை.
hoggin
n. அரித்தெடுத்த சரளை.
hoggish
a. பன்றிபோன்ற, முரட்டுத்தனமான, அழுக்கடைந்த, தன்னலம்பிடித்த.
hogs-head
n. பெரிய மிடா, முகத்தளலவைக் கூறு, 521க்ஷீ2 கேலன்.
hoi polloi
n. (கிரே.) மிகப்பலர், பெரும்பான்மை மக்கள், பொதுமக்கட்கும்பல்.
hoick
v. விமானத்தை வலிந்து நேர் உயரமாகச் செலுத்து, விமானத்தில் நேர்உயரச்செல்லு.
hoick, hoicks
வேட்டைநாய் ஊக்கு குரல்.
hoist
n. உயர்த்துதல், மேலேதள்ளுதல், பாய்மர உயரம், பாய்மரத்தை அடுத்த கொடியின் பகுதி, பாரந்தூக்கி, ஏற்றுமாடம், (வி.) உயரத்தூக்கு, கொடியை உயர்த்து, உயரப் பறக்கவிடு, கயிறு கம்பிகள் மூலம் மேலெழுப்பு, கயிறுகம்பிகள் மூலம் தூக்கு, தூக்கி எறி.
hoity-toity
a. ஆரவாரக் கூச்சலிடுகிற, வீறாப்பான, முகங்கோணிக்கொண்டிருக்கிற, கத்திக்கொண்டு பிணங்குகிற, மட்டுமீறிய தற்பெருமை கண்டு வியப்பும் கண்டனமும் தெரிவிக்கும் குறிப்பு.
hokey-pokey
n. செப்படி வித்தை, மந்திரதந்திரம், ஏமாற்று, தெருவில் விற்கப்படும் கீழ்த்தரக் குளிர்ப்பாலடைக் குழம்பு.
hokum
n. சுவைத்திறமற்ற மக்கள் கும்பலுக்கிசைவாகத் திட்டமிடப்படும் கீழ்த்தர நாடகக் கூறுகளின் தொகுதி, கீழ்த்தரத் திரைப்படக்கூறுகளின் தொகுதி.
holcocrystalline
a. கண்ணாடியின்றி முழுவதும் படிகத்தினாலான அமைப்புக் கொண்ட.
hold
-1 n. பிடி, பிடிப்பு, பிடிப்பாற்றல், வாய்ப்பு, பிடிக்குகந்த பொருள், தனி மனிதனின் வசமான கட்டுப்பாடு, கட்டுப்படுத்திவைக்குமிடம், சிறை, அரண்காப்பிடம், (வி.) பிடி, பிடித்திரு, உறுதியாகக் கையில் பற்று, கைவிடாது வைத்திரு, பிடிப்பில் வைத்திரு, பெற்றிரு, உடைமையாகக் கொண்டிரு, உரிமையைப் பெற்றிரு, வசமாகக்கொண்டிரு, ஆற்றலுக்குள் வைத்திரு, கட்டில் வைத்திரு, சிறைப்படுத்து, வெற்றிகரமாக முற்றுகையிடு, தொடர்ந்து செயலாற்று, தொடர், நீடித்து இயங்கு, தகர்வுறாதியங்கு, அடங்காது தொடர்ந்து இயங்கு, உரிமையுடன் வலியுறுத்து, பிடி முரண்டுகொள், விடாப்பிடி கொள், கையாளு, கைக்கொண்டு பயன்படுத்து, இடங்கொள், உட்கொண்டிரு, கவனத்தைத் தன் பக்கமாகக்கொள், தடைப்படுத்து, தாமதப்படுத்து, நிறுத்து, கொண்டாடு, நடத்து, நடைபெறுவி, கூட்டு, கூட்டிலிணைத்து நடைபெறுவி, கருது, வைத்துக்கொண்டிரு, தாங்கு, பொறு, உறுதியாயிரு, தவறாதிரு, பற்றிக்கொண்டிரு, ஒட்டிக்கொண்டிரு.
hold to account.
பொறுப்புடையவராக்கு.
holder
n. பிடிப்பவர், வைத்திருப்பவர், பதவிபெறுபவர், பதவியில் தற்காலிகமாக அமர்ந்திருப்பவர், பட்டம் பெறுபவர், எழுதுகோலின் கைப்பிடி, பிடிப்புச்சட்டம்.