English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hollowness
n. பொள்ளான்மை, உட்டுளையுடன் கூடிய நிலை, அகழ்வு, வெறுமை, பொய்மை, வஞ்சகம்.
holly
n. முள் இலைகளையும் பசிய சிறுமலர்களையும் சிவப்புப் பழங்களையும் உடைய இலையுதிர்க்காத புதர்ச்செடி வகை.
hollyhock
n. பலநிறப் பெரிய மலர்களையுடைய நெட்டையான செடிவகை.
Hollywood
n. அமெரிக்காவில் காலிபோர்னியாவில் உள்ள மாகாணம், ஹாலிவுட்டில் உருவாக்கப்படும் அமெரிக்கத் திரைப்படத்துறை.
holm
-1 n. துருத்தி, அரங்கம், ஆற்றங்கரையில் அமைந்து வெள்ளம் வரும்போது மூழ்கிப்போகும் திட்டு நிலம், தலை நிலத்துக்கு அண்மையிலுள்ள தீவு.
holm-oak
n. இலையுதிர்க்காத சீமை ஆல்வகை.
holocuast
n. முழு அவியூட்டுப்பலி, பெருங்களப்பலி, நுழிலாட்டு, படுகொலை, பாடழிவு.
holograph
n. உரியவர் கையாலேயே முழுவதும் எழுதப் பட்ட ஆவணம், (பெ.) தம் கையாலேயே முழுவதும் எழுதப்பட்ட.
holohedral
a. மணியுரு வகையில் முழுசெவ்விசைவுக்கு வேண்டிய எல்லாப் பட்டைகளையும் உடைய.
holohedron
n. பளிங்கு வகையில் முழுசெவ்விசைவுக்கு வேண்டிய எல்லாப் பட்டைகளையும் உடைய வடிவம்.
holometabola
n. pl. (வில.) முழு உருமாற்றமடையும் பூச்சி வகைகள்.
holometabolism
n. (வில.) பூச்சி வகையில் முழு உருமாற்றத்துடன் கூடிய வளர்ச்சி.
holophote
n. கலங்கரைவிளக்கத்தில் ஒளிக்கூறு முழுமையையும் வேண்டிய திசையில் வீசுவிப்பதற்கான அமைவு.
holophytic
a. பசுஞ்செடியினைப் போலவே ஊட்ட உணவைப் பெறுகிற.
holothurian
n. (உயி.) புழுவியல்புடைய வட்டவடிவான கடல்வாழ் உயிர்ப் பேரினம், (பெ.) கடல்வாழ் உயிர்ப் பேரினம் சார்ந்த.
holozoic
a. (உயி.) விலங்கினம் போலப் பிற உயிரினங்களிலிருந்தே ஊட்டஉணவு பெறுகிற.
holster
n. சேணத்தில் அரைக்கச்சில் செருகப்படும் கைத் துப்பாக்கிக்கான தோலுறை.
holt
-1 n. காடு, புதர்க்காடு, சோலைமலை, பழத்தோட்டம்.
holus-bolus
adv. ஒருங்கு சேர, எல்லாம் ஒரே மொத்தத் தொகுதியாக.
holy
n. புனிதப்பொருள், திருத்தலம், புண்ணிய மூர்த்தி, (பெ.) புனிதமான, திருநிலையுடைய, தேவாலயம் சார்ந்த, திருப்பணிக்கென ஒதுக்கிவைக்கப்பட்ட, நிறை சமய வொழுக்கமுடைய, சீரிய ஒழுக்க மேம்பாடுள்ள.