English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
hobby
-1 n. விருப்பவேலை, ஓய்வுநேர விருப்பார்வத் தொழில், வாழ்க்கைக்குரிய தலைத்தொழிலல்லாத விருப்பார்வத்துறை, ஆர்வ ஈடுபாட்டுத்துறை, மட்ட விரைநடைக் குதிரை வகை, முற்கால மிதிவண்டி வகை.
hobby-horse
n. விழாக்காலப் பொய்க்கால் குதிரை, சிறுவர் குதிவிளையாட்டுக்கான குதிரைத் தலையுடைய கோல், சிறுவர் விளையாட்டு ஆட்டக்குதிரை, விழாக்கால இராட்டினக் குதிரையிருக்கை.
hobby(2).
n. சிறு வேட்டைப் பருந்துவகை, இராசாளிவகை.
hobgoblin
n. குறளி, குட்டிச்சாத்தான், ஆலி, கொல்லைப் பொம்மை, பூச்சாண்டி.
hobnail
n. புதைமிதியின் அடியில் தைக்கும் பெருந்தலை ஆணி.
hobnailed
a. பெருந்தலையாணிகள் கொண்ட, தலையாணிகள் பதித்த.
hobo
n. நாடோடித் தொழிலாளி, வேலை தேடித் திரியும் தொழிலாளி.
Hobsons choice
n. எடு அல்லது விடு என்ற வகையில் அமைந்த போலித் தேர்வுப்பொருள்.
hock
-1 n. விலங்கின் பின்னங்கால் முழந்தாள் இறைச்சி.
Hock-tide
n. (வர.) ஆங்கிலநாட்டுப் பழங்கால விழா.
hockey
n. வளைகோற்பந்தாட்டம்.
hocus
v. சூழ்ச்சியில் வீழ்த்து, ஏமாற்று, மருந்துகொடுத்து மயக்கமூட்டு, குடிவகையில் மயக்க மருந்துகல.
hocus-pocus
n. ஏமாற்று, செப்படிவித்தை, பொதுமுறை மந்திர வாய்பாட்டுமாதிரி, (வி.) செப்படி வித்தைசெய், ஏமாற்று.
hod
n. கொத்துவேலைச் சாந்து எடுத்துச் செல்லும் தட்டு.
Hodge
n. உருமாதிரிச் சுட்டுக்குறிப்பில் ஆங்கிலநாட்டுப் பண்ணையாள்.
hodge-podge
n. கூட்டவியல், கறிகாய் கலவைக் கூட்டுணவு, சரிசம மதிப்புடன் பங்கிடுவதற்கான உடைமைக் கூட்டுக்கலப்பு, கலவைக் கூளம், கதம்பம்.
hodiernal
a. இன்றைய, இற்றை நாளுக்குரிய.
hodman
n. கொத்துவேலைக் கையாள், சாந்துத்தட்டுத் தூக்குபவர், கைவேலைக்காரன், கூலி எழுத்தாளன்.
hodometer
n. சகடத்தொலைவுமானி.
hoe
-1 n. மண்கிளறி, மண்ணைக்கிளறும் மண்வெட்டி, களைக்கொட்டு, உழவாரப்பட்டை, (வி.) மண்ணைக்கிளறிவிடு, மண்கிளறியைக் கையாளு, களைகொட்டு, தோண்டு, வெட்டி வீழ்த்து, செதுக்கு.