English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
gangliate, gangliated
a. நரம்பு முடிப்புகளுடைய, நரம்பு மையமான.
gangling
a. தளர்நிலையிற் கட்டப்பட்ட, தடுமாற்றமுள்ள கட்டுமானமுடைய.
ganglion
n. நரப்புக்கணு, நரப்பு மண்டல மையப்பிழம்பு, மங்கிய சாம்பல்நிற மாப்பொருள் நிரம்பிய நரம்புமண்டல மையம், ஆற்றல் மையம், செயல் மையம், உயிர் மையம், முக்கிய கூறு.
ganglion-cell, ganglion-corpuscule, ganglion
n. நரம்பு மையக் கருவணு.
ganglionic
a. நரம்பு மையஞ் சார்ந்த, நரம்புக்கணுச் சார்ந்த.
gangrene
n. தரையழுலுடன் கூடிய உடலின் உட்கூற்றழிவு, மரத்துப்போதல், (வினை) அழுகிக்கெட வை, மரத்துப்போ.
gangster,
n. கொள்ளைக்கூட்டத்தான்.
gangue
n. கனிப்பொருள் உலோகக் கலவையுள்ள பாறை.
gangway
n. இருக்கைவரிசைகளின் ஊடாகச் செல்லும் இடைநெறி, கப்பல் ஏற்ற இறக்க இடைவழி, ஊடுவழி, சட்டமன்றப் பின்னிருக்கைகளுக்குச் செல்வதற்குரிய குறுக்கு ஊடுபாதை.
ganister
n. உலை அடுப்புக்களில் உட்சுவராகப் பூசப்பயன்படும் நுண்மணல் கலந்த களிமண் வகை.
gannnet
n. வாத்துப்போன்ற கடற்பறவை வகை.
ganoid
n. பளபளப்பும் வழவழப்பும் உடைய மீன் செதில்கள், பளபளப்பும் வழவழப்பும் உடைய செதிகள் வாய்ந்த மீன், (வினை)பளபளப்பும் வழவழப்பும் உடைய செதிகள் வாய்ந்த,பளபளப்பும் வழவழப்பும் உடைய.
ganoin
n. மீன் செதில்களுக்குப் பளபளப்பைத் த சுண்ணச்சத்து.
gantlemanlike
a. நன்மகனுக்குச் சிறப்பியல்பான, நன்மகனுக்குகந்த, பெருந்தன்மையான, பண்பாளருக்குரிய.
gantry
n. மிடா வைப்பதற்கான நான்கு கால்களுள்ள மரத்தாலான நிலைதாங்கி, பாரந்தூக்கி-கைதட்டி முதலியவற்றை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குக் கொண்டுசெல்லுவதற்குரிய அடிச்சட்டம்.
Ganymede
n. கலமேந்தி, உணவுவிடுதிச் சிற்றான், (வான்.) வியாழனின் மிகப்பெரிய துணைக்கோள்.
gaol
n. காவற்கூடம், சிறைச்சாலை, (வினை) சிறையிடு.
gaol-bird
n. அடிக்கடி சிறைசெல்பவர்.
gaol-delivery
n. மொத்தவிசாரணை, விசாரணைக்குக் காத்திருக்கும் காவற் கைதிகள் எல்லோரையும் ஆணையாளர் மன்றக்கூட்டத்தில் மொத்தமாக ஒருங்கே விசாரணைக்கு அனுப்புதல்.
gaol-fever
n. சிறைச்சாலைகளில் தொற்றுநோயாயிருந்து வந்த கடுமையான கடற்காய்ச்சல்.