English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
gamete
n. பாலணு, இனப்பெருக்கவகையில் இருபால்களின் சார்பாகவும் இணைந்துகலந்து ஒன்றையொன்று பொலிவுபடுத்தும் பாலினச்சார்பான ஊன்மத் துகட்கூறு.
gametenant
n. வேட்டையாடுவது மீன்பிடிப்பது முதலிய உரிமையுடைய நிலக் குத்தகையாளர்.
gamin
n. (பிர.) தெருக்கொடுக்கு.
gaming-house
n. சூதாடுமனை.
gaming-table
n. சூதாடு மேசை.
gamma
n. கிரேக்க நெடுங்கணக்கில் மூன்றாவது எழுத்து, அந்துப்பூச்சி வகை.
gammadion
n. சுஹ்ஸ்திகை வகை.
gammer
n. நாட்டுப்புற வழக்கில் கிழவி.
gammon
-1 n. உப்பிட்டு உலர்த்திய பன்றியின் பின்கால்விலா அடிப்பகுதி இறைச்சி, பன்றித்துடை இறைச்சி வற்றல், புகைப்பதனமிட்ட அல்லது பதனப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி, (வினை) பன்றி இறைச்சியைப் பதனஞ்செய்து பக்குவப்படுத்து.
gamogenesis
n. பாலிணைவுச்சார்பான இனப்பெருக்கம்.
gamopetalous
a. புறவிதழ் இணைவுடைய.
gamut
n. (வர.) ஏழிசைத்தொகுதி, நிறைசுரத்தொகுதி, மக்களினத்தின் முழுச்சுரவட்டம், காலப்பிரிவின் நிறைசுர வட்டம், இடைநிலைக் காலச்சுரத் தொகுதி, இடைநிலைக்கால அடிச்சுரம், குரல் இசைச்சுர முழு ஏற்றவிறக்க நிலை, இசைக்கருவி முழு எற்றவிறக்க வீச்சு, ஆற்றல் முழு எல்லை, செயல்திற முழுவீச்சு.
gamy
a. வேட்டைவிலங்கு புள்வனம் நிறைந்த, வேட்டைவிலங்கு புள்ளினங்கள் முழுச்சுவைப்பதம் பெறும்வரை பேணி வளர்க்கப்படும் நிலையுடைய.
gander
n. ஆண் வாத்து, அறிவிலி, பேதை.
gander-party
n. ஆண்கள் மட்டும் கூடி அளவளாவும் விருந்துக்கூட்டம்.
gang
n. தனிக்கும்பு, கூட்டுக்குழு, வேலையாள்களின் தொகுதி, குற்றம் செய்யும் நோக்கத்தோடு இயங்கும் அல்லது செல்லும் கும்பல், விரும்பாத செயலில் ஈடுபடுங் குழு, ஒரே சமயத்தில் வேலை செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கருவிகலங்களின் தொகுதி, (வினை) விரும்பாத செயலில் ஈடுபடுவதற்காகக் கும்பு சேர், குழுவுணர்ச்சியுடன் ஒன்றுபட்டு ஒத்தியங்கு, கருவி முதலியவற்றை ஒத்திசைவிக்க ஒழங்குபடுத்து.
gang-board
n. படகில் ஏறியிறங்குவதற்குரிய பலகையாலான ஊடிணைப்பு வழி.
gange
v. தூண்டில் முனையை மென்கம்பி வரிந்து காப்பீடு செய்.
ganger
n. குழுமுதல்வர், கும்புக் கண்கானி.
Gangetic
a. கங்கை ஆறு சார்ந்த.