English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Graves
n. பிரஞ்சு நாட்டில் செய்யப்படும் மென்மையான வெண்ணிறமுள்ள இன்தேறல் வகை.
gravestone
n. புதைகுழிக் கல், கல்லறை நினைவுச் சின்னம்.
graveyard
n. புதைகுழி முற்றம், கல்லறை வெளி, இடுகாடு.
gravid
a. சூல்கொண்ட, கருவுற்ற.
graving-dock
n. கப்பல்களைத் துப்புரவாக்குதற்கும் பழுது பார்ப்பதற்கும் உள்ள நிலத்துறை இறவு.
gravitate
v. நிலவுலகம் முதலிய கோளங்களால் ஈர்க்கப்பட்டுச்செல், இயல் ஈர்ப்பாற்றலுக்கு உட்பட்டியாங்கு, ஈர்க்கப் படு, நோக்கிச் சாய்வுறு, இயல்பாக ஆழ், தாழ், படிவுறு, வலங்கொண்ட கவர்ச்சிக்கு ஆட்படு, வைர அப்ழ்வில் பளுவான கற்கள் அடியில் தங்கும் முறையைக் கையாளு.
gravitation
n. இயலீர்ப்பாற்றலுகு உட்பட்டு இயங்குதல், இயலீர்ப்பாற்றில், பாரிப்பு, பொருள்களிடையே உள்ள கவர்ச்சி.
gravity
n. நிலவுலக மைய ஈர்ப்பாற்றல், விசை ஏற்றத்தால் அளவிட்டுணரப்படும் நிலவுலக மைய ஈர்ப்பாற்றலின் வலிமைத்தரம், கனம், வீறமைதி, வினைமை, முக்கியத்துவம், முதன்மை, அமைந்த தன்மை, அமைதிவாய்நத நடை.
gravure
n. நிழற்படச் செதுக்குப்பாளப்படம், நிழற்பட மறிபடிவத்தை உலோகத் தகட்டுக்கு மாற்றிச் செதுக்கி அழ்ன் மூலம் கிடைக்கும் படம், நிழற்படச் செதுக்குப் பாள முறை, நிழற்பட மறிபடிவத்தை உலோகத் தகட்டில் மாற்றிப் படம் உருவாக்கும் முறை.
gravy
n. இறைச்சி வடிநீர், சமைக்கும் முன்னும் பின்னும் இறைச்சியிலிருந்து கசியுஞ் சாறு, வடிசாறு, கறி வகைகளில் கலக்கப்படும் வடிநீர்க்கலவை.
gravy-boat
n. வடிசாறு சமைப்பதற்கான படகுருவைக் கலம்.
gravy-soup
n. வடிநீர்ச்சாறு, இறைச்சி வடிநீர் போன்ற வடிசாறு.
grayling
n. வெண்ணிறங்கலந்த சாம்பல் வண்ண மீன்வகை, பழுப்பு நிறமான சிறகடி வாய்ந்துள்ள வண்ணத்துப் பூச்சி வகை.
graze
-1 n. மேலீடான உராய்வு, தோலுராய்வு, (பெ.) மெல்ல உராய்ந்துசெல், தடவலாகச் செல், தோலுராயவிடு, மேற்பரப்பு உராய்வுறு.
grazier
n. சந்தையில் விற்பதற்காக ஆடுமாடுகளை மேய்த்து வளர்ப்பவர்.
grazing
n. மேய்ச்சல், புல்தின்னல், மேய்தல், மேய்த்துப் பேணல், மேய்த்துக் கால்நடை வளர்த்துப் பெருக்குதல்.
grease
-1 n. கொழுப்பு, பசையுள்ள, எண்ணெய்ப்பொருள், மான் கொழுப்பு, வேட்டை விலங்குகளின் கொழுப்பு, இறந்த விலங்குகளின் உருக்கியெடுக்கப்பட்ட கொழுப்பு, மசகெண்ணெயாகப் பயன்படும் பொருள், தூய்மைப்படுத்தப்படாத கம்பளியிலுள்ள எண்ணெய்ப் பசைப்பொருள், குதிரைக் குளம்புகளிலுள்ள நோய் வகை.
grease-box
n. மசகிடுவதற்காகப் புகைவண்டிச் சக்கரத்தில் பொருத்தப்பட்டுள்ள பெட்டி.
grease-heels
n. குதிரைக் குளம்புகளில் வரும்நோய்வகை.