English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
gratify
v. மகிழ்வி, தாராளச்சலுகை அளி, விட்டுக்கொடுத்து ஆறுதலளி, இசைவாக நடத்தி மகிழச்செய், உகந்தன செய்து உவப்பூட்டு, மனநிறைவடையச்செய், விருப்பம் நிறைவேற்று, அவா நிறைவுசெய், மன ஆறுதலடைவி, நலஞ்செய், நன்றிக் கடப்படுத்து, கையுறை கொடு, கைக்கூலி அளி, பரிசளி, ஊதியம் வழங்கு.
gratin
n. (பிர.) பொரியப்பளரொட்டி, இருதிசைத்தணல் இடையே வைத்துப் பக்குவப்படுத்திய ரொட்டிப்பொதி அல்லது பாலேட்டுச் சீவல், பொரியப்பள ரொட்டி செய்யும் சமையற் பக்குவ முறை.
grating
-1 n. கணப்புச் சட்டியில் நெருப்புத் தாங்கும் குறுக்குச் சட்டம், தடுப்பு இரும்புக்கிராதி, ஒளிக்கோட்ட மூலம் நிறப்பட்டை தோற்றுவிக்கும்படி இணைவரை இரும்புக்கம்பி அல்லது புறவரியிட்ட நோக்காடி வகை.
gratis
adv. கைம்மாறுகருதாமல், விலையில்லாமல்.
gratitude
n. நன்றி, நன்றியறிதல்.
gratuitous
a. நன்கொடையான, கைம்மாறு கருதாத, உள்நோக்கமற்ற, தூண்டுதல் காரணமற்ற, தன் விருப்பார்ந்த, தன்னியல்பாகச் செய்யப்பட்ட, தானாக வலிந்து தரப்பட்ட, புரியாத்தனமான, பொருத்தமற்ற, தௌிவற்ற, ஆதாரமற்ற, (சட்.) ஒருகட்சியினருக்கு மட்டும் நலந்தருகிற.
gratuity
n. நன்கொடை, பணிக்கொடை, ஊழியக்கைம்மாறு, விருப்புதவித்தொகை, நன்மதிப்புத்தொகை, ஒய்வுதவி, படைவீரன் பதவியிலிருந்து விலகும் போது அளிக்குப்படும் நல்லெண்ணக்கொடை.
gratulate
v. பாராட்டு, மகிழ்ச்சிதெரிவி, வலவேற்று மகிழ், நல்வரவு அளி.
gravamen
n. குறை, குறைமுறையீடு, குற்றச்சாட்டின் சாரம், குற்றச்சாட்டின் மோசமான பகுதி, திருக்கோயில் மாமன்றத்தின் கீழவையிலிருந்து மேலவைக்கு அனுப்பப்படும் முறையீட்டுப் பத்திரிகை இதழ்.
grave
-1 n. கல்லறை, புதைகுழி, கல்லறைத் திடல், பிணக்குழி, மீதடப்படும் மணமேடு, கல்லறை நினைவுச் சின்னம், சாவு, மாண்டார் உலகு, கீழுலகம், அழிவுக்களம், முடிவிடம், உருளைக்கிழங்கு முளைகளை இட்டு மூடுவதற்கான நெடுங்குழி.
grave-clothes
n. பிணத் துணி.
grave-digger
n. புதைகுழி தோண்டுபவர், முட்டைகளினின்று வெளிவரும் புழுக்களுக்கு உணவாகும்படி பூச்சிகள் முதலிய வற்றைப் புதைத்துவைக்கும் வண்டு வகை.
graved, v. grave
-1 என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
gravel
n. சரளைக்கல், (மண்.) சரளைப்படுகை அடுக்கு, பொன் உட்கொண்ட பரற்கல்லடுக்கு, (மரு) கல்லடைப்பு, சிறுநீர்ப்பையில் மணிக்கற் கட்டல் (வினை) சரளையிடு, பாற்கல் கொண்டு பாவு, திகைப்பூட்டு, மலைக்கச் செய்.
gravel-blind
a. பாதிக்கு மேற்பட்ட அளவில் கண்பார்வை கெட்ட.
gravel-pit
n. சரளைக் கற்குழி.
gravel-voiced
a. கரகரப்புக் குரலுடைய.
gravel-walk
n. சரளைக்கல்லிட்ட நடைபாதை.
graven, v. grave(2),
என்பதன் முடிவெச்ச வடிவங்களுள் ஒன்று.
graver
n. செதுக்குபவர், சித்திரந் தோண்டுவோர், எஃகு உளி வகை.