English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
graphic
a. சித்திரம் வாய்ந்த, ஓவியம் சார்ந்த, செதுக்குக் கலை சார்ந்த, எழுத்துருவமான, எழுதும் கலை சார்ந்த, விளக்கவுரை சார்ந்த, குறிவரைக்குரிய, உயிர்ச்சித்திரம் போன்ற, விரிவிளக்கமான, கனிப்பொருள் வகையில் மேற்பரப்பில் எழுத்துருப்போன்ற வரைத் தடங்கள் உள்ள, கனிப்பொருள் வகையில் வெட்டுவாயில் வரைத்தடங்களையுடைய.
graphically
adv. படத்தோற்றம் போன்று, விளக்கமாக, தௌிவாகத் தெரியும் படி, உயிர்ச்சித்திரம் போன்று, எழுத்து மூலம் விளக்கமாக, விளக்கவுரை மூலமாக, குறிவரை மூலமாக.
Graphis
n. எழுத்துப்போன்ற விதையமைப்புக் காளான் வகை.
graphite
n. காரீயகம், கனிப்பொருள் வகை.
graphium
n. கரியகத் தாள்களின் மூலம் பல படியெடுத்தற்குப் பயன்படும் முனைக்கூருடைய கருவி.
graphiure
n. மயிர்க்குஞ்ச நுனிவாலுடைய தென்னாப்பிரிக்க கொறிவிலங்கு வகை.
graphology
n. கையெழுத்துமூலம் நடத்தை முதலிய வற்றை ஆய்தல், கையெழுத்துமூலம் நடத்தை முதலிய வற்றை மதிப்பிடுங் கலை, விளக்கக் குறிவரை வாய்பாடு.
graphotype
n. மேற்பரப்பை அச்சிடுவதற்கான புடைப்பகழ்வுச் சித்திரக் கட்டை, புடைப்புகழ்வு அச்சுக்கட்டையின் செய்முறை.
grapnel
n. பல வளைநகங்களடைய சிறு நங்கூரம், பாதாளக் கரண்டி, இறுகப்பிடிக்கும் இரும்புக் கொளாவி, நொக்கி மாட்டுங் கருவி, கருவிரலுகம், எதிரிக் கப்பலைப் பிடிக்க உதவும் வளைநகப்பிடி நங்கூரம்.
grapple
n. கருவிலலுகம், பற்றிப்பிடிக்குங் கருவி, மல்லர்பிடி, நெருங்கிய போட்டிச் சண்டை, (வினை) கொளாவியால் பற்றிப்படி, இறுகப் பற்று, நெருங்கி அருகே சென்று மல்லாடு, போராடு.
grappling
n. கொளாவியால் பிடித்தல்.
grappling-Iron
n. இரும்புக் கொளாவி, கருவிரலுகம், கடற்போரில் எதிரிக் கப்பல்களைக் கைப்பற்றுவதற்குப் பயன்படும் எறிகொக்கி.
grapy
a. கொடிமுந்திரிப் பழங்களாலான, கொடிமுந்திரிப்பழங்கல் போன்ற.
grasp
n. படிப்பு, கைப்பிடி, ஆற்றல், பற்றும் ஆற்றல், எட்டுந்தொலை, கட்டுப்படுத்தும் சக்தி, அடக்கியாலும் திறம், மனம் பற்றிக்கொள்ளும் திறம், மூளையில் வாங்கிக் கொள்ளும் ஆற்றல், (வினை) பற்றிப்பிடி, பிடிபடு, பற்ற முயற்சி செய், எட்டிப்பற்று, பேராவலுடன், கைப்பற்று, பறி.
grasping
a. பேராசைபிடித்த, பிறர்பொருள் வெளவுகிற.
grass
n. புல், புல்வகை, மேய்ச்சல், மேய்ச்சல் நிலம், புல் நிலம், புல்மூடிய நிலம், சுரங்கத்தொழில் வகையில் நிலத்தின் மேற்பரப்பு, சுரங்கத்தின் தலைப்பு, (வினை) புல் தீனி கொடு, புல்கரண் கொண்டு மூடு, மென்சணலின் நிறம் வெளுக்கும் படி வெயிலில் உலர வை, எதிரியைக் கீழே வீழ்த்தியடி, மீனைக் கரைக்குக் கொணர், பறவையைச் சுட்டு நிலத்தில் வீழ்த்து.
grass-cutter
n. குதிரைக்குப் புல் தீவனம் சேகரிக்கும் பணியாள், புல்செதுக்கி.