English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ghastly
a. கோரமான, பேய் போன்ற, பேய்த்தன்மை, வாய்ந்த, அதிர்ச்சி உண்டுபண்ணுகிற, நடுக்கம் தருகிற, சாவுக் களையுடைய, விளறிய, வெறித்த தோற்றமுடைய, மயிர்க்கூச்சிட வைக்கும் வண்ண வடிவமுடைய, புன்முறுவல் வகையில் போலியாக வருவித்துக்கொள்ளப்பட்ட, (வினையடை) கோரமாக, வெறிப்பாக,.
ghat, ghaut
(இ.) மலைத்தொடர், மலைக்கணவாய், ஒடுக்கமான வழி, ஆற்றல் இறங்குதுறை.
Ghazi
n. (அரா.) இஸ்லாமிய புனிதப் போர்வீரர், புறச் சமயிகளை எதிர்த்தழிக்கும் இஸ்லாமியர், இஸ்லாமிய மத வெறியர், துருக்கிய உயர்மதிப்புப் பட்டம்.
gherkin
n. ஊறுகாய் போட உதவும் வெள்ளரிவகைப் பிஞ்சு.
ghetto
n. (வர.) நகரத்தில் யூதர்கள் வாழம் பகுதி.
Ghibelline
n. இததாலி நாட்டில் இடைநிலைக்காலத்தில் பேரரசரை ஆதரித்த கட்சிகளுள் ஒன்று (பெ.) இடைநிலைக்கால இத்தாலியில் பேரமரசரை ஆதரித்த கட்சி சார்ந்த.
ghost
n. ஆவி, கடவுளின் தூய ஆவி, ஆன்மா, பேய், பேய் உரு, பேய்த்தோற்றம், நிழலுருவம், பொய்த்தோற்றம், உருவெளிக்காட்சி, நலிந்து மெலிந்தவர், எலும்புக்கூடு, உள்ளீடற்ற பொருள், சாரமற்ற பொருள், வெற்றுரு வரை, நிழற்பண்பு, சாயல், உருவரைத் தடம், கூலிக் கலைஞர், தொலை நோக்கிக் கண்ணாடி வில்லையின் கோளாறு காரணமாகத் தோறறும் ஒளிப்பட்டை அல்லது இரட்டித்த அடையாள அலையுடன் பின் அலை கலப்பதால் ஏற்படும் இரட்டைத் தோற்றக் குளறுபடி.
ghost-word
n. எழுத்துப் பிழையாலோ அச்சுப்பிழையாலோ தோன்றி உளதாகப் பாவிக்கப்பட்டு வழக்கிலேற்படும் சொல், போலிச்சொல்.
ghostly
a. பேய்த்தோற்றமுள்ள, ஆவி சார்ந்த, உடற்பண்பற்ற, ஆன்மிக, சமயம் சார்ந்த.
ghoul
n. கீழை நாட்டுக் கதைகளில் வரும் பிணந்தின்னும் பேய்.
giallo antico
n. (இத்.) இத்தாலிய இடிபாடுகளில் காணப்படும் உயர்ந்த செம்மஞ்சள் சலவைக்கல்.
giant
n. அரக்கர், இராட்சதர், பேராற்றல் வாய்ந்தவர், இயல்பு மீறிய உயரமுடையவர், இயற்கை மீறிய உயரமுடைய விலங்கு, மட்டுமீறிய உயரமுடைய மரம், பெருந்திறலாளர், (பெ.) அளவிற்பெரிய பேராற்றல் வாய்ந்த.
giant-cement
n. உறுதிச் சீமைக்காரை.
giant-hood, giantism
அரக்க நிலை, அரக்கத்தன்மை, கதையில் அரக்கர் நிகழ்ச்சியியல்பு, பெரிய அளவு, பேருருவம்.
giant-powder
n. சுரங்க வெடிமருந்து வகை.
giantomachy
n. தேவாசுரப் போர்.
giants-stride, giant-stride
n. இராட்சத நடைக்கருவி.
giaour
n. (பெர்.) இஸ்லாமிய வழக்கில் புறச்சமயி, கிறித்தவர்.
gib
n. பொருத்தும் உலோகமுளை, மரஆப்பு.