English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
gibber
n. புரியாப்பிதற்றல், குரங்கின் சலசலப்பு ஒலி, (வினை) புரியாது பிதற்று, குரங்கின் சலசலப்பு ஒலிசெய், பிதற்று, உளறு, பரபரப்பாகப் பேசு.
gibberish
n. தௌிவற்ற பேச்சு, புரியா மொழி, பொருளற்ற ஒலி, இலக்கண வழுவுடைய குற்றம் செறிந்த பேச்சு.
gibbet
n. கொலைக்கம்பம், தூக்குக் கம்பம், தூக்கிடு, தண்டனை, (வினை) தூக்கிலிடு, பொது இகழுக்கும் கண்டனத்துக்கும் ஆளாக்கு.,
gibbon
n. கிழக்கிந்தியத் தீவுகளிலுள்ள நீண்ட கைகளுள்ள குரங்குவகை.
gibbose, gibbous
குவிவான, தொங்கலாகப் புடைத்து உந்திக்கொண்டிருக்கிற, தொப்பை போல முன் தள்ளிய, கூனலான, குவிந்து வளைந்த முதுகுடைய, திங்கட்கோளில் அரைவட்ட அளவிற் கவிந்து முழுவட்டத்தில் குறைந்த, ஏற்றத்தாழ்வாய் இருபுறமும் புறங்குவிந்த.
gibe
n. இகழ்ச்சி, ஏளனம், (வினை) இகழ்ச்சிசெய், எள்ளிநகையாடு.
gibus
n. இசை நாடகத்தில் அணியப்படும் தொப்பி, நீளமடிப்புக் குல்லாய்.
giddy
a. கிறுகிறுப்பான, தலைசுற்றுகிற, மயக்கங்கொண்ட, மயங்கிக் கீழே விழத்தக்க, தடுமாற்றம் தருகிற, தலைசுற்றுகிற வேகத்திற் சுழல்கிற, சுக்ஷ்ன் றோடுகிற, இறுமார்ந்த, தன்னைமறந்த, எளிதில் உணர்ச்சி வசப்படுகிற, முன்னாய் வற்ற, ஆழ்ந்தாய்வற்ற, மனஉறுதியற்ற, ஒரு நிலைப்படாத, அடிக்கடிமாறுகிற, சிறுபிள்ளைத்தனமாக, விளையாட்டியல்புடைய, (வினை) கிறுகிறுக்கப்பண்ணு, மயங்கச் செய், கிறுகிறுப்புறு, மயங்கு, மனஉலைவு உண்டுபண்ணு.
gif
-2 n. மீன் ஈட்டி வகை.
gift
n. கொடை, கொடைப்பொருள், நன்கொடைட, பரிசில், அரும்பெற்ற பேறு, அருந்திறம், அரும்பண்பு, அருங்குணம், அருட்கொடை, வரம், இயற்கைத்திறம், இயற்பேறு, இயற்பண்பு, பண்புக்கூறு, கையுறைக்கொடை, கைக்கூலி, (சட்.) மனமார்ந்த உடைமை மாற்றம், (வினை) கொடையளி, நன்கொடையாக வழங்கு, பண்புத்திறமாக இயலுவி.
Gift house
பரிசுப் பொருளகம் (இல்லம்)
gift-book
n. பரிசு ஏடு, பரிசிற் புத்தகம்.
gift-horse
n. பரிசிற் குதிரை, நன்கொடைக்குதிரை.
gifted
a. இயற்கைப் பேறுகள் நிரம்ப வாய்க்கப் பெற்ற, இயல்பாகத் திறமையுள்ள.
gig
-1 n. இருசக்கர ஒற்றைக் குதிரை வண்டி, கப்பல் பாய்மரங்களும் துடுப்புகளும் வைக்கப் பயன்படும் குறுகிய சிறுபடகு, பந்தயப்படகு.
gigantean, gigantic
பேருருவம் படைத்த, மிகப்பெரிய, இயற்கை மீறிப் பெரிதான, அரக்கனைப்போன்ற.
gigantesque
a. அரக்கனுக்கேற்ற, பெரும்பேருருவத்தைக் குறிக்கிற.
giggle
n. கொக்கரிப்பு, இளிப்பு, ஒழுங்கு கெட்ட பெண்ணின் பண்பற்ற சிரிப்பு, (வினை) இளி, பண்பற்ற சிரிப்புச் சிரி, ஒழுக்கிலிபோல் நகை.
giglet, giglot
பண்பற்ற பெண், பண்பின்றி நகைப்பவள்.
gigman
n. இருசக்கர ஒற்றைக் குதிரைவண்டி வைத்திருப்பவர், ஆன்மிகக் கலையுணர்ச்சியற்ற சமுதாயக் கட்டுப்பாட்டு மதிப்புடைய நடுத்தர வகுப்பின் உறுப்பினர்.