English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fountain
n. நீர் ஊற்று, ஆறு முதலியவற்றின் மூலம், பீறிட்டடிக்கும்படி செய்யும் நீர்த்தாரை, தாரை நீருற்றுக்கான அழகிய கட்டுக்கோப்பு, பொதுக் குடிதண்ணீர் ஊற்று, விளக்கின் எண்ணெய்ச் சேமிப்பிடம், அச்சகங்களில் மை வழங்கும் கொள்கலம்.
fountain-head
n. மூலாதாரம், மூலத்தோற்றுவாய், மூலத்தொடக்கம்.
fountain-pen
n. ஊற்றுப்பேனா.
four
n. நான்கு, நான்கு என்னும் இலக்கம், நால்வர், நான்கு பொருள்கள்கொண்ட தொகுதி, ஆட்டம் முதலியவைகளில் நான்குகொண்ட கெலிப்புப் புள்ளிகள், நான்கு துடுப்புள்ள படகு, நீள் உருளைகள் நான்குள்ள இயந்திரம், நான்கு உருளைகளையுடைய விசைவண்டி, 'நான்கு' என்னும் குறிஅளவுள்ள மிதியடி, குறி அளவு நான்காகவுள்ள பொருள், நான்கு புள்ளிகளையுடைய அட்டைட, நாலுகெலிப்புப் புள்ளித்தொகுதி, நண்பகல் அல்லது நள்ளிரவுக்குப் பின்னர் நான்காவது மணி, (பெ.) நான்கு என்னும் எண்ணுக்குரிய.
four-ball
n. குழிப்பந்தாட்ட வகையில் நான்கு பந்துகளை வைத்துக்கொண்டு இருவருக்கெதிராக இருவர் ஆடும் ஆட்ட வகை.
four-eyes, n. sing
நீரிலிருக்கும்போதும் நீருக்கு வெளியிலிருக்கும்போதும் பார்ப்பதற்காக இரண்டு பிரிவுகளாயுள்ள கண்களையுடைய மீன்வகை.
four-figure
n. 1000 முதல் ஹீஹீஹீஹீ வரையுள்ள எண்களில் ஒன்று.
four-flush
n. சீட்டாட்ட வகையில் ஒரே இனத்தைச்சேர்ந்த நான்கு சீட்டுக்களைப் பெற்றிருக்கும் ஆட்டக்காரர், (பெ.) ஏய்ப்பான, உண்மையல்லாத, (வினை) சீட்டாட்டவகையில் ஏமாற்று.
four-fold
a. நான்காக மடிக்கப்பட்ட, நான்கு மடங்கான, (வினையடை) நான்கு பிரிவுகளாக.
four-foot
a. அளந்தால் நான்கடியுள்ள.
four-footed
a. நான்கு கால்களுள்ள.
four-handed
a. சீட்டாட்ட வகையில் நான்கு ஆட்டக்காரர்களால் ஆடப்படுகிற, குரங்குகள் வகையில் நான்கு கைகளுள்ள.
four-horse, four-horsed
a. நான்கு குதிரைகளால் இழுக்கப்படுகிற.
four-in-hand
n. ஒரே வலவனால் செலுத்தப்படும் நான்கு குதிரைகள் பூட்டிய வண்டி, ஒரே வலவன் செலுத்தும் நாற்கால் வண்டிக் குதிரைகள், அசைந்தாடுமாறு கட்டப்படும் கழுத்துப்பட்டை, (பெ.) நான்கு குதிரைகள் பூட்டிய, (வினையடை) நான்கு குதிரைகள் பூட்டிக்கொண்டு.
four-leaved
a. நான்கு சிற்றிலை உறுப்புக்களையுடைய.
four-oar
n. நான்கு துடுப்புக்களைக்கொண்டு செலுத்தப்படும் படகு.
four-oclock
n. அந்திமந்தாரை, பிற்பகலில் பூக்கும் மலர்ச் செடிவகை.
four-part, fourparted
a. நான்கு பாகங்களுடைய, இசைத்துறையில் நால்வர் பாடுவதற்கென அமைக்கப்பட்ட.
four-post
a. கட்டில் வகையில் நான்கு திரைக்கம்பங்களையுடைய.
four-poster
n. நான்கு திரைக்கம்பங்களையுடைய பெரிய கட்டில், நான்கு பாய்மரங்களையுடைய கப்பல்.