English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
fought, v. flight
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
foul
n. வெறுக்கத்தக்க செய்தி, தீமை, மோதல், முறை தவறிய ஆட்டம், (பெ.) அருவருக்கத்தக்க, புலன்களுக்கு வெறுப்புத்தருகிற, கடுவெறுப்பூட்டுகிற, உருக்குலைவான, முடைமநாற்றம் வாய்ந்த, துப்புரவு கெட்ட, காற்று-நீர்ச் சூழல் வகையில் நச்சுப்பட்ட, அழுக்கடைந்த, கறைபடிந்த, சேறார்ந்த, குப்பையடைந்த, வண்டலார்ந்த, கப்பலடி, வகையில் சிப்பிகூளமடைந்த, அடைப்புண்ட, சிக்கலான, முடிச்சுவகையில் தாறுமாறான, புயலார்ந்த, மழைமலிந்த, ஓயாத்தூறலான, கேடார்ந்த, பாதகமான, மிக மோசமான, வெட்கக்கேடான, கீழ்த்தரமான, கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த, கொச்சையான, நேர்மைக்கேடான, ஆட்ட வகையில் முறை, தவறான, மோதலான, பயனற்ற, அற்பமான, (வினை) அழுக்காக்கு, மாசுபடு, கறைபடு, அடைப்புண்டு தடைப்படு, புகைவண்டிப்பாதைப் போக்குவரத்துத் தடைப்படு, நங்கூரத்தைக் கம்பிவடங்களிற் சிக்க வை, சிக்குறு, மோது, குற்றப்படுத்து, இகழ் உண்டுபண்ணு, புகழ் கெடு, (வினையடை) ஆட்ட வகையில் முறை தவறி, மேல் மோதலாக, நேர்மைக் கேடாக, நம்பிக்கைக்கேடாக.
foul-mouthed
a. இழிசொற்களையே பேசும் வழக்கமுள்ள.
foul-play
n. முறைதவறான ஆட்டம், வாய்மையற்ற செயல், வஞ்சனை, வன்செயல், கொலை.
foulard
n. நெகிழ்வுடைய மென்மையான பட்டுத்துணிவகை, பட்டுத்துணி வகையினாலான கைக்குட்டை.
foule
n. பளபளப்பான மேற்பரப்புடைய மெல்லிய கம்பளி ஆடை.
foully
adv. வெறுப்புண்டாக்கும் வகையில், கொடுமையாக, இரக்கமின்றி, பொருந்தா அவமானத்தோடு.
foulness
n. அழுக்கற்ற நிலை, அருவருப்பான பொருள், வெறுப்புண்டாக்கும் கொடுமை.
found
-2 v. கட்டிடம் முதலியவை வகையில் அடிப்படையிடு, நிறுவுதல் செய், ஏற்படுத்து, நிறுவு, தோற்றுவி, தொடங்கிவை, கட்டு, அடிப்படைமிதமை, ஆதாரமாகக்கொள்.
found(1), v. find
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
foundation-muslin, foundation-net
n. உடுப்புகளையும் பெண்டிர் அணியுங் குல்லாய்களையும் விறைப்பாக்குவதற்காகப் பசையிட்டு ஒட்டவைத்த துணிவகைகள்.
foundation-school
n. நிதியேற்பாட்டுத் திட்ட உதவி மீதமைந்த பள்ளி.
foundation-stone
n. கடைக்கால், அடிக்கல்.
foundationer
n. நிறுவனத்தின் நிதிகளிலிருந்து ஆதரிக்கப்பெறுபவர்.
founder
-1 n. நிறுவுபவர், அமைப்பவர், தோற்றுவிப்பவர், அறக்கொடை அளிப்பவர்.
foundling
n. எடுப்புப் பிள்ளை, கேட்பாரற்றுக் கண்டெடுக்கப்பட்ட குழந்தை.
Foundry
வார்ப்பகம், வார்ப்படச் சாலை
fount
-1 n. (செய்.) ஊற்று, மூலம், ஆதாரம், விளக்கின் எண்ணெய்ச் சேமிப்பிடம், ஊற்றுப்பேனாவின் மைகொள் பகுதி.