English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
formality
n. சட்ட விதிமுறை ஒழுங்கு, சம்பிரதாயம், மரபொழுங்கு, ஆசாரம், வினைமுறை, சடங்நு, நயநாகரிக முறை, புற ஆசாரத்தன்மை, மரச்சட்டம் போன்ற பண்பு.
formalize
v. சட்ட உருக்கொடு, விதிமுறைப்படுத்து, ஆசாரமாக்கு, வழுவிலா ஒழுங்கமைதி அளி, நௌிவு இழைவு அற்றதாக்கு.
format
n. (பிர.) புத்தகத்தின் வடிவமும் அளவும்.
formate
-1 n. கரிசக்காடி உப்பு, எறும்பின் கசிவில் அடங்கிய காடியிலிருந்து எடுக்கப்படும் உப்புவகை.
formation
n. உருவாக்குதல், உருவாதல், வகத்தமைப்பு, செயலாக்கம், உற்பத்தி, ஆக்க அமைவு, உரு அமைவு, கட்டமைவு, உறுப்பொழுங்கமைவு, படை அணிவகுப்பு, அணிவகுப்பமைதி, போர்நிலை விமானத் தொகுதிநிலை அமைவு, (மண்.) பாறை அடுக்கமைவு, (தாவ.) செடியினக்குழு.
formative
n. உருவாக்கி வளர்க்க உதவும் கூறு, ஆக்கச் சொல், (பெ.) உருவாக்கம் சார்ந்த, வளர்ச்சிக்குரிய, உருவரையறை செய்கிற, உருவாக்க உதவுகிற, வளர்ச்சிக்கு உதவுகிற, உருவாகிற, உருப்பெற்ற வளர்கிற, வளரத்தக்க, வளரும் பருவத்துக்குரிய, (இலக்.) சொல்லாக்கத்துக்குக் கூறாய் உதவுகிற, பகுதி சாராத.
Formatting bar
வடிவமைப்பட்டை
forme
n. அச்சகப்பதிப்புப் படிவம், அச்சிடுவதற்காகத் தளைச்சட்டத்தில் முறையாக வைத்து இறுக்கப்பட்ட அச்சுருப்படிவம்.
former
pron முந்தியது, இரண்டில் முதலாவதாகச சொல்லப்பட்டது, (பெ.) சென்ற காலத்துக்குரிய, முந்தியகாலம் சார்ந்த, முந்திய, இரண்டில் முன்கூறப்பட்ட.
formerly
adv. முற்காலங்களில், முன்னாளில்.
formic
a. எறும்புகள் சார்ந்த.
formication
n. தோலின் மேல் எறும்பு ஊர்வது போன்ற அரிப்புணர்ச்சி.
formidable
a. அஞ்சவரு தோற்றமுடைய, கடுமிடல் வாய்ந்த, வல்லமைமிக்க, வெல்ல முடியாத, தடுக்க முடியாத, எதிர்த்து நிற்கமுடியாத.
formless
a. உருவற்ற, திட்டமான வடிவமில்லாத, ஒழுங்கான தோற்றமற்ற.
formula
n. வாய்ப்பாடு, சுருக்க விதிமுறை, விளக்க நுற்பா, கட்டளைச் சொல், வக்கணை வாசகம், குறிப்புச் சொல், நினைவுக் குறிப்பு, மருந்துமுறைப் பட்டியல்குறிப்பு, வகை முறைமை, சமயமரபு முறை, குருட்டு விதிமுறை, கொள்கை முறை வகுப்பு, (கண.) கட்டனை விதி.
formulary
n. வாய்பாடுகளின் தொகுதி, மரபுமுறைகள் அடங்கிய சுவடி, வினைமுறைக் கட்டளை ஏடு, (பெ.) வாய்பாடுகள், வடிவிலுள்ள, வாய்பாடுகள் சார்ந்த, வினைமுறைகளுக்குரிய, விதிக்கப்பட்ட.
formulate, formulize
வாய்பாடு வடிவமாக்கு, வாய்பாடாகச் சொல், முறைப்படுத்து, ஒழுங்குமுறையாக எடுத்துக்காட்டு.
fornication
n. மணமாகா ஆண் பெண் கலவி.
forrel
n. கணக்குச் சுவடிகளுக்கு உறைபோடுதற்கான தோல் போன்ற தாள்.