English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
flapper
n. ஈக்களைக் கொல்லும் தட்டையான கருவி, கிளி கடி கருவி, பறவைகளை அச்சுறுத்தி விரட்டும் கிலுகிலுப்பை, காட்டு வாத்துக்குஞ்சு, கவுதாரிக்குஞ்சு, கீலிற் பொருத்தப்பட்ட தொங்குமடல், தொங்கல், மடி, அகலமான மீன்துடுப்பு, மேலோடுள்ள உயிரின வகையின் வால், நினைவில் ஓயாது ஊடாடுபவர், ஓயாது நினைவில் ஊடாடும் பொருள், துடுக்கான பெண்.
flare
n. கிளரொளி, முரண் கதிரொளி, திடீர் அழல்வீச்சு, பட்டொளி, கடலின் அடையாள ஒளிவீச்சு, தீப்பந்தம், இலக்கொளிப்படுத்த வானுர்தியிலிருந்து எறியப்படும் கிளரொளி வெடிகுண்டு, பகட்டாவாரம், கப்பற் பக்கங்களின் மேல்நோக்கிய புடைப்பு, பாவாடை முதலியவற்றின் அகன்று செல்லும் புடைப்பு, மணியின் கூண்டு போன்ற விரிவு, (வினை) சுடர்விட்டெரி, மின்னிடு, கூரொளிவீசு, கொழுந்துவிட்டெரி, உணர்ச்சி கிளர்ந்தெழு, சீறியெழு, பகட்டாகக் காட்டு, பாவு, பாவாடை போல் பரப்பு, மணியின் கூண்டுபோல் அகல்விரிவாகு, அலைந்தாடு.
flare-path
n. வானுர்தி ஓடி வான் ஏற அல்லது இறங்கி ஓட உதவும் ஒளிவிளக்கம் செய்யப்பட்ட நிலப்பாதை.
flare-up
n. திடீர் அழல் எழுச்சி, திடீர்ப்புகழ், மிகக் குறுகிய காலத் திடீர்விளம்பரம், தீடீர்ச்சிற்றம், ஆர்ப்பாட்டக் களியாட்டம்.
flash
n. திடீரொளி, மின்வெட்டொளி, கணநேர அழற்பாய்ச்சல், கணநேரம், நொடிப்போது வெளிப்பகட்டு, புற ஆரவாரம், திடீருணர்ச்சி, மின்விடும் கருத்துப்பாய்ச்சல், திரைப்படத்தில் கணநேரக்காட்சி, கணநேர முன்காட்சிப் பதிவு, சுருக்கமான தந்திச்செய்தி, சாராயச் சத்துக்களுக்கு வண்ணமுட்டும் கவலைக்கூறு, படைத்துறைப் பிரிவுகளின் அடையாளமான வண்ணப்பட்டை, முழந்தாளுக்குக் கீழ்த் தெரியும் படி விடப்படும் படைத்துறை அடையாளக்காலுறைப் பகுதி, முழுந்தாளுக்குக்கீழ் விடப்பட்ட அடையாளக் இழைக்கச்சை, ஆழம் குறைந்த இடத்தைப் படகு கடப்பதற்காக மதகுவாயிலிருந்து திறந்து விடப்படும் நீரோட்ட ஓழுக்கு, ஆழம் குறைந்த இடத் படகு கடப்பதற்காகச் செய்யப்படும் துறை, நீரை ஆழமாக்குதற்கான பலகை அணைப்பு, கருதிய திசையில் நீரை ஓடச்செய்தற்கான அணைப்பலகை, திருடர்களின் கொச்சை வழக்குக் குழு உக்குறி, (பெ.) பகட்டான, பொய்யான, போலியான, பொய்வேடமான, கீழ்த்தரமான, கொச்சையான, திருடர்களைச் சார்ந்த, திருடர்களின் கொச்சை வழக்கு சார்ந்த, (வினை) திடீரெனச் சுடரிட்டு ஒளிவீசு, பொறி சிதறி அழன்றெழு, பளிச்சிடு, மின்னிட்டு மறை, எதிரொளியிடு, மினுங்கு, மின்னொளிபோலத் தெறி, மின்வெட்டுப்போல விரைந்தனுப்பு, திடீர்ப்பாய்ச்சல்கள் மூலமாகச் செலுத்து, விரைந்துசெல், பாய்புறு, மின்னிடவை, திடுமெனத் தோன்று, திடீரென்று கருத்தில் தோன்று, கூசவை, தந்தி மூலம் அனுப்பு, கண்ணாடிவார்ப்பில் உருக்கிய குழம்பை மெல்லிய தகடாகப் பரப்பிப்பாய்ச்சு, மெல்லிய தகடாகப் பரவிப்பாய்வுறு, கண்ணாடிப் பாளத்தின் மீது வண்ண மென்படலம் பரப்பு, நீர்வகையில் வேகமாகப்பாய், எழுந்து பாய், பாய்ந்து நிரப்பு, பாய்ந்து பெருகு, பாய்ந்து பொங்குவி.
flash-board
n. நீரோடையை ஆழமாக்குதற்கு இருபுறங்களிலும் பதிக்கப்படும் பலகைகளில் ஒன்று.
flash-house
n. விலைமகளிர் இல்லம்.
flash-light
n. மின்பொறிக் கைவிளக்கு, கைப்பந்தம், கலங்கரை விளக்க ஒளி, அடையாளக் குறியீடான விளக்கொளி, நிழற்படமெடுப்பதற்குரிய கூரொளி.
flash-pipe
n. ஆவி விளக்கில் வரித்துளைகளுள்ள மிகைப் படியான குழாய்.
flash-point
n. தீயை அருகிற் கொண்டுசென்றால் உடனே தீப்பற்றிக்கொள்ளக்கூடிய நீர்மத்தின் வெப்பநிலை.
flashback
n. திரைக்காட்சியிடையே முன்னிகழ்ச்சியின் இடைப்பதிவு.
flasher
n. புறப்பகட்டாளர், விளம்பரக் காட்சியணியில் ஒளி தோன்றித்தோன்றி மறையச் செய்வதற்கான அமைவு.
flashing
-1 n. கொழுந்துவிட்டெரிதல், விளம்பரப்படுத்துதல், திடீரென நீர் உடைப்பெடுத்துப் பெருகுதல், (பெ.) ஒளிக்கதிர்களை உமிழ்கின்ற, மின்னுகிற, பளபளப்பான, பளிச்சென ஒளிவிடுகிற.
flashy
a. கணநேரத்தோற்றமுடைய, தோன்றிமறைகிற, புறப்பகட்டான, பகட்டித்திரிகிற, உள்ளீடற்ற, போலியான, மலிவுச்சரக்கான, அற்பமான.
flask
n. குடுவை, எண்ணெய்க்குடுவை, வேட்டைப்பையுறை, தோல் அல்லது உலோகத்தாலான வேட்டைக்காரரின் வெடிமருந்துக்குரிய பெட்டி, பிரம்பினால் வரிந்து பின்னப்பட்ட குறுகிய கழுத்தையுடைய எண்ணெய்க்கு அல்லது தேறலுக்கு உரிய இத்தாலியப் புட்டி வகை, பயணக்குடுக்கை, பயணம் செல்பவர்கள் தேறல்-சாராய வகைகள் கொண்டுசெல்லும் உலோகத்தாலான அல்லது தோலுறையுடன் கூடிய கண்ணாடியாலான புட்டி.
flasket
n. துணிக்கடை, சிறிய குப்பி.
Flasks
குடுவைகள், சேமச்செப்பு, சேமக்குடுவை
flat
-1 n. அறைக்கட்டு, குடியிருப்புத்தட்டு, குடிவாழ்வுக்கு அமைந்த பல அறைகளின் தொகுதி, கடற்படை சார்ந்த கப்பலில் அறைமுகப்புக்களுடன் இணைந்த தட்டுக்கூடம்.
flat-boat
n. தட்டைப்படகு.
flat-fish
n. தட்டைக் கடல்மீன் வகை.