English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
flambeau
n. சுளுந்து, மெழுகுதிரிகளை இணைத்துக்கட்டிய தீப்பந்தம்.
flamboyant
n. தீக்கொழுந்து நிறமுள்ள மலர்வகைகளில் ஒன்று, (பெ.) அலையெழுந்து வீசியெறியும் தீக்கொழுந்து போன்ற, (க-க.) அலைத்தெழும் தழல்போன்ற தோற்றம் வாய்ந்த வேலைப்பாடுடைய, அழல்வண்ணப் பூம்பகட்டு ஒப்பனையுடைய, வண்ணப்பகட்டான, வீணாரவாரமிக்க, ஆர்ப்பாட்டமான.
flame
n. அனற்கொழுந்து, தீநாக்கு, எரிதல் ஆவி, ஒளிப் பிழம்பு, சுடரொளி, ஒளிவண்ணம், ஆர்வக்கனல், பற்றார்வம், கருத்துவேகம், சீற்றம், கடுஞ்சினம், முனைத்தெழும் காதல், ஆர்வக்காதலர், அந்துப்பூச்சி வகைகளில் ஒன்று, (வினை) பிழம்பாக வீசு, தழலாகப் பரவு, எரிதழல் ஒளிச்சின்ன வழியாகச் செய்தி அறிவி, எரிதழல் வெப்பத்துக்கு உட்படுத்து, உணர்ச்சிகொந்தளித்தெழு, சினந்தெழு, எழுச்சியூட்டு, சினமூட்டு, காதல் வெறியூட்டு.
flamen
n. பண்டைய ரோமாபுரித் தெய்வத்துக்குரிய சமய குரு.
flaming
a. கொழுந்துவிட்டெரிகிற, கடுவெப்பமான, மிகு சூடான, ஒளிநிறமுடைய, உருத்தெழும் வண்ணமுடைய, உயர்வு நவிற்சியான, அளவுக்கு மீறிய புகழ்ச்சியான.
flamingo
n. மராளம், நாறைபோன்ற, பெரிய செந்நிறப் பறவை வகை.
flammenwerfer
n. (செர்.) போரில் நெருப்புக்குழம்பைப் பீறிட்டு வெளிப்படுத்தும் இயந்திரப்பொறி.
flan
n. பழம் முதலியனவுள்ள பணியார வகை.
flanerie
n. (பிர.) சோம்பேறித்தனமாயிருத்தல், காலத்தை வீணாக்குதல்.
flaneur
n. (பிர.) சோம்பேறி, வீணாகச் சுற்றித்திரிபவன்.
flange
n. தட்டையான விளிம்பு, நீட்டிக்கொண்டுள்ள கழுத்துப்பட்டை வகை, விலாவெலும்பு, (வினை) நீட்டிக்கொண்டுள்ள கழுத்துப்பட்டை வகையை அணி.
flank
n. விலா எலும்புகளுக்கும் இடுப்புக்கும் இடைப்பட்ட சதைப்பற்று மிக்க பாகம், மலையின் பக்கச்சிறை, கட்டிடத்தின் புடைச்சிறை, படையின் புடையணி, சிறகம், புடைச்சிறை, (வினை) படைவகுப்பின் பக்க அணியாய் அமை, புடையணி காத்துநில், சிறையணியில் அமையுறு, பக்க அணியில் இடம்பெறு, பக்கச்சிறையில் தாக்கு, பக்கவாட்டில் இடர்வருவி, புடைப்பகுதியை அச்சுறுத்து.
flanker
n. பக்கவாட்டுக் காப்பரண், சிறையணிவகுப்பு, பக்கச்சிறைப்பகுதி.
flankers
n. pl. பக்க அணி தாக்குபவர்கள், படையின் புடைச்சிறைக்குத் தாக்குதல் தொல்லை தருபவர்கள்.
flannel
n. நாரியல் சணல் துணி, நாரியல் சணல் துணியாலான உள்ளுடை.
flannelette
n. பருத்தியாலான நாரியல் மென்சணலாடைப் போலி.
flannels
n. pl. நாரியல் மென்சணல் துணிவகைகள், நாரியல் மென்சணல் துணியாலான உள்ளுடைகள், மென்சணல் துணிக்கட்டுகள்.
flap
n. மொத்துதல், தட்டல், சிறகடிப்பு, திண்வார்த்தொங்கல், ஆடல்விளிம்பு, தொங்கற்பகுதி, சட்டைப்பையின் மூடு விளிம்பு, தொப்பியின் கவிதைவிளிம்பு, பொறிக்கதவம், ஒருபுற அடைப்பிதழ், தடுக்கிதழ், அறுவையில் தளரவிட்ட தோல் தொங்கல், காளாண் குடையின் திறந்த மேற்பகுதி, (பே-வ.) கொந்தளிப்பு நிலை, (வினை) சிறகடித்துக்கொள், சிறகுபோன்ற அகல் தொங்கல் பகுதியை அடித்துக்கொள், படபட என்று அடி, மேலும் கீழும் ஆட்டு, முன்பின் ஊசலாட்டு, படபட என்று அடிக்கப்பெறு, ஆடு, ஊசலாடு.
flapdoodle
n. பித்தலாட்டம், வெறும்புரட்டு, மட்டமான முகப்புகழ்ச்சி.
flapjack
n. மாவிற் சுட்ட எண்ணெய்ப் பணியாரவகை, முகப்பூச்சுமா வைக்கும் தட்டையான சிங்காரப்பெட்டி.