English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
flaxen
a. சணலாலான, சணல்சார்ந்த, தலைமயிர்வகையில் செம்மை செய்யப்பட்ட சணல் போன்ற நிறமுடைய, இலேசான பழுப்பு மஞ்சள் வண்ணமான.
flaxy
a. சணல்போன்ற, சணலின் வண்ணச்சாயலுடைய.
flay
v. தோலுரி, கடுமையாகக் கண்டனம் செய், கொள்ளையடி, பாழாக்கு, குதிரைப்பந்தய வெளிப்புல் நிலவகையில் ஓரத்தைக் கத்தரி.
flay-flint
n. பணம்பிடுங்கி, கஞ்சன்.
flea
n. தௌ்ளுப்பூச்சி, உண்ணி, வெறுக்கத்தக்க இழிவான சிறிய உயிரினம்.
flea-bite
n. தௌ்ளுப்பூச்சிக்கடி, தௌ்ளுப்பூச்சிக்கடியாலான சிறு வடு, அற்பப்பொருள், அற்பச்செய்தி, மிகச்சிறிய தொந்தரை, மிகச்சிறு செலவு, விலங்கு வண்ணத்திற்சிறிய செந்நிறச் சாயலுள்ள கறை.
flea-bitten
a. தௌ்ளுப்பூச்சிகளால் கடிக்கப்பட்ட, கஞ்சத்தனமான, இழிந்த,. விலங்ககளின் மங்கல்நிற மேனிமீது சிறிய செந்நிறச் சாயலுள்ள கறைகள் படிந்த.
fleam
n. அறுவைக் கூர்ங்கத்தி.
flech, flense
திமிங்கிலத்தை வெட்டு, திமிங்கிலத்தைத் துண்டுபோடு, கடல்நாயைத் தோலுரி.
fleche
n. (பிர.) திருக்கோயிலின் இருபுற மாடத்திற்கும் இடையேயுள்ள மெல்லிய தூபி.
fleck
n. மறு, மச்சம், தோலிலுள்ள புள்ளி, வடு, வண்ணக்கீற்று, ஒளிக்கீற்று, சிறுதுகள், புள்ளி, (வினை) புள்ளிகளிடு, மறுப்படுத்து, வெவ்வேறான நிறங்களாக்கு.
flecker
v. புள்ளிகளிடு, பல்வேறு நிறங்களாக்கு, பட்டை பட்டையாகச் சிதறடித்துவை.
fled, v. flee
என்பதன் இறந்தகாலம்.
fledge
v. சிறகுடையதாக்கு, இறகளி, இறகுகளால் அணிசெய், பறப்பதற்குரிய சிறகுகளை எய்தப்பெறு.
fledgeling, fledgling
சிறுபறவை, புதிதாகச் சிறகு முளைத்த பறவை குஞ்சு, உலக அனுபவமற்றவர்.
flee
v. ஓடிப்போ, தப்பி ஓடு, மறைந்துபோ, அணுகாதிரு, தொலைவாக்கி வை, தவிர், விலக்கு, நீக்கு.
fleece
n. கம்பளியாட்டு மயிர், கம்பளியாட்டு மயிர்போலப் பயன்படம் பிற விலாங்குமயிர், ஓர் ஆட்டில் ஒருதடவை கத்தரித்த கம்பளி அளவு, கம்பளிபோன்ற முறமுறப்பான வளமான தலைமயிர், கம்பளிபோன்ற பொருள், முகிற்கற்றை, பனின்கீற்று, பஞ்சுக்கற்றை, கம்பளிக்கற்றை, (வினை) கம்பளி மயிரினைக் கத்தரி, மயிர்க்கத்தரித்து ஆட்டின் உடலை வெறுமையாக்கு, பணம்பறி, உடைமை கைப்பற்று, கம்பளிபோல மூடிமறை, மூடாக்கிடு.
fleeced
a. கம்பளிமயிர் போர்த்த.