English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
extravagate
v. தகுதி வரம்புகூட, நெறிதவறி அலை.
extravasate
v. கலத்தினின்றும் நீர்மத்தை வன்மையுடன் வெளியேற்று, வெளியே பாய்ந்து வடி.
extreme
n. முனைக்கோடி, புறக்கோடி, முகட்டுக்கூறு, உச்சமுனை, உச்ச எல்லை, உச்ச அளவு, (கண.) முதலும் இறுதியுமான இருதிசைக் கோடிகளில் ஒன்று, (அள.) கருவாசகத்தின் எழுவாய் பயனிலைகளுள் ஒன்று, பெரும்பதம் சிறுபதமாகிய ஈரெல்லைப் பதங்களில் ஒன்று, (பெ.) புறக்கோடியான, மையத்தினின்றும் மிகுதொலை விலகிய, இரு புறக்கோடிகளிலும் அமைந்துள்ள, உச்ச அளவான, உச்ச நிலையான, மிகுதியான, கடந்த நிலையான, கடைசியான, வாழ்க்கை இறுதிவேளைக்குரிய, கடு முனைப்பான, நெடுந்தொலை, முனைந்து செல்கிற, கண்டிப்பான, மட்டில்லாத, விசையெழுச்சிமிக்க.
extremity
n. இறுதி முனை, கடைசி, அறுதி, எல்லை, கெடுதி, இடர், மனக்கலக்கம், துயர், தொல்லை.
extricate
v. சிக்கலிருந்து விடுவி, சிக்கல் அகற்று, இக்கட்டிலிருந்து காத்து வெளியேற்று, இடரிலிருந்து வெளிக்கொணர், (வேதி.) சேர்மானத்திலிருந்து இயைபியலாற்றில் மூலம் வளிபிரிந்து செல்லவிடு.
extrinsic
a. புறம்பேயுள்ள, புறம்பேயிருந்து வருகிற, புறம்பேயிருந்து இயக்குகிற, அயல்வரவான, அயற்பண்பான, உரியதல்லாத, உள்ளார்ந்ததல்லாத, முக்கியத்துவமற்ற, சிறுதிறமான, தசைப்பற்றுகள் வகையில் உடல்முதலிலிருந்து கிளையை அல்லது வளையத்தை நோக்கிச் செல்கிற.
extrorse
a. (தாவ.) மகரந்தப்பை வெளிப்புறம் திரும்பியுள்ள.
extrovert
n. வெளியுலக ஈடுபாட்டாளர், (வினை) புறமுகமாகத்திருப்பு.
extrude
v. வெளியே தள்ளு, புறத்தே உந்துவி, வெளிநீட்டு, புறந்துருத்து, உந்து.
exuberance, exuberancy
n. வளங்கொழிப்பு, பொங்கு வளம், களி கிளர்ச்சி, மொழி வகையில் சொல்வளம், நடைவகையில் அணிவளம், உணர்ச்சிப்பொங்கல், திடீர் உணர்ச்சி எழுச்சி, கூறியது கூறல், வீண்மிகை.
exuberant
a. வளங்கொழிக்கிற, செழித்து வளர்கிற, பொங்கி வழிகிற, ஏராளமான, உணர்ச்சி பொங்குகிற, களி கிளர்ச்சியுடைய, மொழிவகையில் சொல்வளமிக்க, மொழிநடை வகையில் அணிவகை மலிந்த, செயல் வகையில் தாராளமான.
exuberate
v. மல்கு, பொங்கு வழி, தடையின்றி நுகர்விலாழ்.
exude
v. கசி, கசியவிடு, வெளிவிடு, வடி, புழுங்கு, ஈர ஆவி வெளிப்படுத்து.
exult
v. மகிழ்ச்சியில் திளை, களி மகிழ்வுகொள்.
exuviae
n. pl. மேலேர்டுக்கழிப்புப் பொருள்கள், விலங்கினால் களையப்பட்ட தோல் ஓடு முதலியவை, புதைபடிவ மேலோட்டுப்பகுதி.
exvelsior
n. மிகளம் உயர்ந்தது, உள்திணித்து இடநிரப்ப உதவும் மரச்சீவல், (பெ.) மிக உயர்ந்த.
eyas
n. பருந்தின் இளங்குஞ்சு, பயிற்றுவதற்காகக் கூட்டிலிருந்து எடுக்கப்பட்ட பருந்தின் குஞ்சு.
eye
n. கண், கண்விழி, கண்ணுருளை, கட்பகுதி, கண்குழிவிடம், விழித்திரை, விழி முகப்பு, பார்வை, பார்க்கும் ஆற்றல், நோக்கு, இலக்கு, கவனம், புலனாற்றல், உணருந்திறம், கண்ணிறமுடையது, மயில் இறகுக்கண், மையப்புள்ளி, கண்போன்ற குழிவுடையது, ஊசியின்காது, வட்டத்துறை, காலதர், புழைவாயில், முடப்பந்தில் முடக்கு நுழைப்புக்குரிய புழை, சுரங்க வாய்வழி, நீருற்றுக்கண், கொக்கியின் கம்பியிழைக்கண்ணி, கொக்கியின் வளையம், உருளைக்கிழங்கிலுள்ள விதைமுளை, முட்டை மீதுள்ள பொட்டு, மூக்குக்கண்ணாடிவில்லை, (வினை) நோக்கு, கூர்ந்து பார், கவனி.
eye-bath
n. கண் கழுவுதற்குரிய கண்ணாடி நீர்க்கலம்.