English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
externalize
v. புறவடிவம் கொடு, பண்புருக்ககற்பி.
externals
n. pl. புறக்கூறுகள், புறப்பண்புக்கூறுகள், கருமெய்ம்மை சாராத செய்திகள், முக்கியத்துவம் இல்லாத சிறுதிறப் பண்புகள்.
exterritorial
a. ஆட்சி எல்லைக்கு அப்பாற்பட்ட, ஆட்சிக்குப் புறம்பான எல்லை சார்ந்த, தூதுவர் வகையில் பணிநில ஆட்சிக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்குரிமை பெற்ற.
exterritoriality
n. வாழ்நிலை ஆட்சி யெல்லைக்குப் புறம்பே இருக்கத்தக்க உரிமை.
extinct
a. குடும்பம் இனம் ஆகிய வற்றின் வகையில் மரபற்றழிந்த, உரிமைகள் வகையில் தகுதி வாய்ந்த கோரிக்கை யாளரின்மையால் தொடர்பற்றுப்போன, நிலையம் முதலிய வற்றின் வகையில் வழக்காறொழிந்த, நெருப்பு வகையில் தணலவிந்த, எரிமலை வகையில் எழுச்சியடங்கிய, துஞ்சு நிலையுற்ற, வாழ்க்கை அவாவகையில் தணிந்தாறிப்போன, மாண்ட, உயிர்ப்படங்கிய, நடப்பிலிருந்து மறைந்த.
extinction
n. தீநொதுப்பு, அணைவு, மரபழிவு, உயிர்ப்படக்கம், எழுச்சி ஓய்வு, வழக்கொழிதவு, தொடர்பறவு, கடன் அறுதி, மாள்வு, மறைவு.
extinguish
v. அணை, அவி, தணிவி, ஆற்றல் அழி, மேம்பட்ட ஒளியின்முன் மங்கச்செய், மறைவி, எதிரியை வாயடக்கு, அழி, கடன்முழுதும் தீர், ஒழி, துடைத்தழி.
extinguisher
n. அணைப்பவர், அழிப்பவர், அணைப்பது, அழிப்பது, விளக்ககொளி அணைக்கும் கருவி, தீயணைப்புப்பொறி, அணைப்புக்கருவி போன்ற குவிகுவட்டு வடிவக்கட்டமைப்பு.
extirpate
v. வேரோடு பிடுங்கியெறி, அடியோடிழி, பூண்டோடகற்று.
extol
v. மெச்சு, மிக உயர்வாகப் புகழ், ஆர்வமாகப் பாராட்டு.
extort
v. அச்சுறுத்திக் கைப்பற்று, வலிந்து பறி, வாக்குறுதியை விடாப்பிடியாய் வற்புறுத்திப்பெறு, சொற்களிலிருந்து வலிந்து பொருள் தருவி, மூல ஆதாரங்களிலிருந்து வாரா முடிபு வருவி, பிழிந்தெடு, கசக்கித்தருவி.
extortion
n. அச்சுறுத்திப் பணம் பறித்தல், வலிந்து பெறுதல், சட்டத்திற்குப் புறம்பான பணம் பறிப்பு.
extortionate
a. சட்டத்திற்குப் புறம்பாகப் பணம் பறிக்கிற, வலிந்து கொள்ளைகொள்ளும் பழக்கமுடைய, விலைவகையில் மட்டுமீறிய, கொடிய.
extra
n. மிகைப்படியானவர், மிகைப்படியானது, தனிமிகைக்கட்டணத்துக்குரிய கூறு, பாடதிட்டத்துக்குப் புறம்பான பகுதி, விலைப்பட்டியிலடங்காத தனி உருப்படி, பத்திரிக்கையின் வெளியீட்டுக்குப்பின் அச்சிடப்பட்ட தனிமிகையான படி, மரப்பந்தாட்டத்தில் நேரடிப் பந்தெறியின்றிப் பிறிது வழியில் பெறப்பட்ட கெலிப்புப் புள்ளி, திரைப்படத்துறையில் சிறுதிற நடிப்புக்குரிய குழு நடிகருள் ஒருவர், (பெ.) தனி மிகையான, மிகைப்படியான, இயன்மிகையான, இயல்பான வகையைவிடப் பேரளவான, மேம்பட்ட பண்புடைய, (வினையடை) மிகைப்படியாக, தனிமிகையாக, இஸ்ன்மிகையாக, வழக்க மீறி மேம்பட்ட நிலையில்.
extra-atmosphereric
n. வளி மண்டலத்திற்கப்பாற்பட்ட இயல் வெளி.
extra-essential
a. கருநிலைப்பண்புகளுட்படாத, உள்ளார்ந்த பண்புத்திறங்கட்குப் புறம்பான.
extra-judicial
a. முறைமன்ற நேரடி வழக்குடன் தொடர்பற்ற, சட்ட முறைப்படியான உரிமை சாராத, குற்ற ஏற்பு ஒப்புதல் வகையில் முறைமன்றத்தில் செய்யப்படாத.
extra-official
a. பணிமனை சாராத, அலுவலகச் சார்பற்ற.
extra-sensory
a. பொதுநிலைப்புலனுணர்வுக்கப்பாற்பட்ட, உண்ணோக்கு-தொலைவிலுணர்தல் ஆகிய வற்றின் வகையில் பயன்படுத்தும் உணர்வு சாராத.
extracosmical
a. அண்டத்திற்கப்பால் செயற்படுகிற.