English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
expansible
a. விரிவாக்கப்படத்தக்க, விரிவுறக்கூடிய.
expansile
a. விரியக்கூடிய.
expansion
n. விரிவடைதல், விரிவடைந்தநிலை, விரிவு, பரப்பு, படர்ச்சி, பெருக்கம், விரிவாக்கப்பட்ட ஒன்று, வாணிகக் கொடுக்கல்வாங்கல் பெருக்கம், விரிவாக்கப்பட்ட அளவு, ஆட்சிப்பரப்பின் விரிவு.
expansionism
n. ஆட்சிஎல்லை விரிவுக்கொள்கை.
expansionist
n. நாட்டின் ஆட்சிப்பரப்பினை விரிவாக்க வேண்டுமென்னும் கோட்பாடுடையவர்.
expansive
a. நாலாபக்கமும் பரவுகிற, பெரிதும் விரிவாக்கப்பட்ட, விரிவான, அனைத்தையும் உள்ளடக்குகிற, விரிவப்ற்சியுறும் இயல்புடைய, வளரும் ஆற்றலுடைய, விரிவான, பரந்தகன்ற, ஆட்கள் வகையில் தாராளமாகப் பேசிப்பழகுகிற, உணர்ச்சிவகையில் கனிவு எழுச்சியுடைய, பேச்சுவகையில் சொல்வளமுடைய.
expatiate
v. வளம்பட உரை, விரிவாக எழுது, கட்டறுச் சுற்றிச்செல்.
expatiative, expatiatory
a. எல்லைகடந்து விரிந்து செல்கிற.
expatriate
v. நாடுகடத்து, குடிபெயர்த்து வெளியேற்று, குடிமை உரிமையைத்துற.
expatriation
n. நாடுகடத்தல், நாட்டைவிட்டு வெளியேற்றப்பெறல், தாயகத்துறப்பு.
expect
v. எதிர்ப்பு, காத்திரு, வரவு நோக்கு, எதிர்நோக்கு, நாடகக் கூடுமெனக்கருது, இன்னபடி நடக்கவேண்டுமென நினை.
expectance, expectancy
n. எதிர்நோக்கியுள்ள நிலை, கருதியிருக்கை, எதிர்கால வாய்ப்புவளம், எதிர்பார்க்கப்படுவது, அவாநம்பிக்கை.
expectant
n. எதிர்நோக்கியிருப்பவர், பதவி முதலிய வற்றுக்கான வேண்மர், (பெ.) எதிர்நோக்குகிற, காத்திருக்கிற, உடைமைபெறும் வாய்ப்பு எதிர்நோக்கியுள்ள, பதவிவாய்ப்பு எதிர்நோக்குகிற.
expectation
n. எதிர்நோக்கியிருத்தல், காத்திருத்தல், எதிர்பார்த்திருப்பதற்குரிய செய்தித, எதிர்பார்க்கத்தக்கது, எதிர்பார்க்கத்தக்க அளவு, எதிர்பார்க்கப்படுவதன் மதிப்பு.
expectations
n. pl. மரபுவழி வந்துசேரத்தக்க உடைமை வாய்ப்புக்கள், எதிர்பார்க்கப்பட்ட செய்திகளின் தொகுதி, வருநிலை வாய்ப்பு வளங்கள், வருநிலை நேர்வுவளங்கள்.
expectative
n. ஒழிவாகுமுன்பே முற்பட எதிர்நோக்கி வழங்கப்படும் மானியம், எதிர்பார்க்கப்படும் பொருள், (பெ.) எதிர்பார்க்கப்படுகிற, எதிர்பார்க்கப்படும் பொருள் சார்ந்த, மானிய வகையில் கொடுப்பவர்க்கே மீள்கிற, மானிய மீட்சி சார்ந்த.
expecting
a. (பே-வ.) சூலுற்ற.
expectorant
n. கபம் வெளிக்கொணரும் மருந்து, (பெ.) கபம் வெளிக்கொணர உதவுகிற.
expectorate
v. கபம் வெளியேற்று, இருமிக் கபத்தை வெளிக்கொணர்.
expectoration
n. இருமிச் சளி வெளிப்படுத்துதல், கபம் உமிழ்வு.