English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
exigent
a. அவசரமான, உடனடியாகச் செயலாற்ற வேணடிய, உடனே கவனிக்கவேண்டிய, நெருக்கடியான, தொல்லைமிக்க, கொடுமைப்படுத்துகிற.
exigible
a. கேட்கப்படக்கூடிய, கொடுமைசெய்து வாங்கப்படக்கூடிய.
exiguous
a. குறைவான, போதாத.
exile
n. நாடு கடத்தும் தண்டனை, நாடு கடத்தப்பெற்றவர், நீடித்த தாயக நீத்த வாழ்வு, தொலைவயல்நாட்டுவாழ்வு, (வினை) நாடுகடத்தும் தண்டனை அளி, நாடு கடத்து.
exilian, exilic
பாபிலனில் யூதர்கள் நாடு கடத்தப்பட்டமை சார்ந்த.
exility
n. மென்மை, நொய்ம்மை, நன்மை, நயம்.
exist
v. உளதாகு, உளதாயிரு, வாழ், வாழ்ந்திரு, குறிப்பிட்ட சூழ்நிலையில் அமைவுறு, தோன்று, காணப்பெறு.
existence
n. உளதாம்தன்மை, வாழ்வு, வாழ்க்கைவழி, பிழைப்பு, வாழும்முறை, உள்பொருள், வாழுயிர், உள்பொருள் உலக முழுமை, இயலுலகு.
existent
a. உளதாயிருக்கிற, வாழ்கிற, உண்மையான, நடைமுறையிலுள்ள தான.
existential
a. உளதாந்தன்மை சார்ந்த, புறநிலை உண்மை, நிலை வலியுறுத்துகிற.
existentialism
n. புறமெய்ம்மை மறுத்த வாழ்வியல் மெய்ம்மைக் கோட்பாடு.
exoderm
n. (தாவ.) அரும்பின் புறத்தோல் மேலம்தாள்.
exodus
-1 n. புறப்பாடு, குடியெழுந்துசெல்லும் குழுவின் வெளியேற்றம், எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் மேற்கொண்ட செலவு.
exogamic, exogamous
ஒருவன் தனது இனத்துக்குப் புறம்பேதான் மவ்ம் செய்துகொள்ளவேண்டுமென்னும் கட்டுப்பாடு உடைய.
exogamy
n. ஒருவன் தனது இனத்துக்குப் புறம்பேதான் மணம் செய்துகொள்ளவேண்டுமென்று கட்டுப்படுத்தும் வழக்க மரபு.
exogen
n. (தாவ.) தண்டின் புறவளர்ச்சியுடைய இருகதுப்பு விதைச்செடியினம்.
exogenous
a. (தாவ.) தண்டின் புறவளர்ச்சியுடைய இருகதுப்பு விதைச்செடியினம் சார்ந்த.
exon
n. நாடுகாவல் படைவீரர்களின் நாற்பெரும்தலைவருள் ஒருவர்.
exonerate
v. குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய், குற்றமில்லையென்று தௌிவுபடுத்து, பொறுப்பிலிருந்து விடுவி.