English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Exhaust fan
உறிஞ்சு விசிறி, காற்றுப்போக்கி
exhaust-pipe
n. வளிபோக்கிக்குழல்.
exhausted
a. செலவாய்விட்ட, வடியப்பெற்ற, வெளியேற்றத் தீர்ந்த, வெறுமையாக்கப்பெற்ற, முழுமையும் பயன்படுத்தப்பட்ட, முழுதும் ஊக்கமழிந்த, முற்றும் சோர்வடைந்த, நாடு வகையில் வலிமையிழந்த, வளமிழந்த.
exhaustible
a. செலவுசெய்துதீரக்கூடிய, வெறுமையாக்கப்பெறத்தக்க.
exhaustion
n. முழுச்சோர்வு, முற்றும் வெறுமையாக்குதல், முழுவதும் பயன்படுத்துதல், முற்றும் வெறுமையாக்கப்பெற்ற நிலை, வாதங்களில் ஒற்றைமாற்றுகள் யாவும் தீர்வுறல்.
exhaustive
a. ஒரு பொருளைப்பற்றித் தீர ஆ பாங்குடைய, தீர்வாய்வான, ஒன்றுவிடாமல் யாவுமளாவிய, நுணுக்கம்விடா அகல்விரிவான.
exhaustless
a. எடுக்க எடுக்கக் குறையாத, வற்றாத.
exhibit
n. (சட்.) சான்றாவணம், சான்றாக நீதிமன்றத்தில் கொண்டுவைத்துக் காட்டப்படும் பொருள், பொருட்காட்சியிலுள்ள காட்சிப்பொருள், பகட்டுக்காட்சி, ஆரவாரப்பகட்டு, (வினை) பொருட்காட்சியில் வை, பொதுவிடத்தில் காட்சிக்கு வை, ஆய்வுக்காக முன் வை, திறந்துகாட்டு, பகட்டாக காட்டு, பண்பினை எடுத்துக்காட்டு, இயல்பினைத் தௌிவாகக் காட்டு, குறித்துக்காட்டு.
exhibitioner
n. பல்கலைக்கழகத்தில் ஆதரவுப்படியைப் பெற்று வருபவர்.
exhibitionism
n. பகட்டாரவாரப்பாங்கு, மிகைப்பட்ட நடத்தைப்பண்பு, (மரு.) அம்மணமாகத் திரியும் சித்தக் கோளாறுநிலை.
exhibitory
a. காட்டிக்கொள்ளுகிற, பகட்டிக்கொள்ளும் பாங்குடைய.
exhilarant
n. ஊக்கந்தரும் மருந்து, (பெ.) உணர்ச்சியூட்டுகிற, ஊக்குகிற, மகிழ்விக்கிற.
exhilarate
v. மகிழ்வி, ஊக்கு, உயிர்ப்பூட்டு.
exhilarating
a. மகிழ்விக்கிற, கிளர்ச்சியூட்டுகிற.
exhilaration
n. கிளர்ச்சியுற்றநிலை, மகிழ்வு, பூரிப்பு, களிப்பு.
exhort
v. வற்புறுத்து, ஆர்வமாகத்தூண்டு, நற்செயலுக்கேவு, அறிவுரை கூறு, பரிந்து பேசு.
exhortation
n. நன்மதிகூறல், செவியறிவுறுஉ, அறிவு கொளுத்தும் உரை, சமயச்சொற்பொழிவு.
exhortative, exhortatory
a. நன்மதிகூறும் பாங்குடைய, நலந்தூண்டுகிற.
exhumate, exhume
தோண்டியெடு, புதைத்த பிணத்தை வெளியிலெடு, மறைவிலிருந்து வெளிப்படுத்து.
exigence. Exigency
n. அவசரத்தேவை, நெருக்கடிநிலை பெருந்துயரம்.