English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ending
n. முடிவு, இறுதி, கடைப்பகுதி, சொல்லின் விகுதி.
endive
n. இனிய குடிநீர்மம் செய்யப் பயன்படும் சுருள்இலைச் செடிவகை.
endless
a. முடிவற்ற, ஓய்வற்ற, எல்லையில்லாத, இடைவிடாத, தொடர்ச்சியான.
endocarditis
n. குலையணைச் சவ்வின் வீக்கம்.
endocardium
n. குலைதயிணைச் சவ்வு, நெஞ்சுப்பையின் உள்வரி மென்தோல்.
endocarp
n. விதைத்தோட்டின் கடைசி உள்ளேடு.
endocrane
n. மண்டையோட்டின் உட்பரப்பு.
endocrine
a. சுரப்பி வகையில் உள்ளாரச்சுரக்கிற, செல்நரம்பிழையின்றி நேரே குருதியுள்ள கசிவு செலுத்துகிற.
endoderm
n. அரும்பு மேற்கவிவின் உள்தாள், கருவுயிர் உறையின் உள்வரிச்சவ்வு.
endogamous
a. குலப்பிரிவில் அகமண உறவுக்கட்டுடைய, புறமணத்தடையுள்ள.
endogamy
n. குலப்பிரிவில் அகமண உறவுக்கட்டு, புற மணத்தடை முறை.
endogen
n. தண்டில் அகவளர்ச்சியுடைய, புறக்காழ்ப் புல்லினவகை.
endogenous
a. தண்டக வளர்ச்சியுடைய, உள்ளீடான தண்டு வளர்பகுதி வாய்ந்த.
endolymph
n. காதின் உள்நீர்மம், செவி நிணநீர்.
endometritis
n. கருப்பை உட்புறச் சவ்வின் வீக்கம்.
endomorph
n. கனிப்பொருளின் உள்ளீடாயுள்ள கனிப்பொருள்.
endoparasite
n. உடலக ஒட்டுயிர்.
endoplasm
n. ஊன்ம உள்தொலி, உயிர்ச்சத்தின் உள்வரிச் சவ்வு.
endorse
v. பத்திரத்தின் பின்புறம் எழுது, பொருள் முறியில் புறவரியாகப்பெயர் எழுது, விளக்கக் குறிப்பெழுது, புறவுரை குறி, வலியுறவு செய், ஆதரவுக் கருத்துக்குறி, ஆதரி.
endorsement
n. புறவரி எழுதுதல், புறக்குறிப்பு, ஏற்பிசைவு.