English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
embryoctony
n. (மரு.) கருவழிவு, கருவிலேயே உயிரழிவுறுதல்.
embryogenesis
n. கரு உருவாதல், கருவாக்கம்.
embryology
n. கருவியல் நுல், கரு உருவாகி வளர்ச்சியடைவது பற்றிய ஆய்வு நுல்.
embryotomy
n. (மரு.) கருவுயிர்க்கூறுபாடு, வயிற்றினும் கருவை வெட்டியெடுத்தல்.
embus
v. படைத்துறை வீரர்களை சரக்குகளையோ பேருந்து வண்டியில் ஏற்று, பேருந்து வண்டியில் ஏறு.
embusque
n. (விர.) களச்சேவை தட்டிக்கழிப்பவர், உள்நாட்டிலோ மூலதளத்திலோ வேலைதேடிக்கொள்வதன் மூலம் களமுன்னனிச் சேவையிலிருந்து தப்பித்துக்கொள்பவர்.
emend
v. மூலபாடத்திலுள்ள குற்றங்களை, குறைபாடுகளை அகற்று, திருத்து, சீர்படுத்து.
emendation
n. பிழையினைக் களைதல், பாடதிருத்தம்.
emendator
n. சுவடிகளிற் பிழைகள் திருத்துபவர், சீர்ப்படுத்துபவர்.
emendatory
n. செப்பனிடுகிற, திருத்தஞ் செய்கிற.
emerald
n. பச்சைக்கல், மரகதம், மரகத நிறம், அச்செழுத்துரு அளவு வகை.
emerge
v. நீர்மத்தின் மேலெழு, கிளம்பு, வெளிப்பட்டுத்தோன்று, வெளிப்படு, மீள், விட்டு வெளியேறு, ஆய்வின் விளைவாகத் தௌிவுபடு.
emergence
n. வெளிப்படல், திடுமெனத்தோன்றுதல்.
emergency
n. உடனடித்தேவை, திடீர்த்தேவை, நெருக்கடி நிலை, எதிர்பாரா நிகழ்ச்சி, சேமப்பகரப்பொருள், சேமப்பகர ஆள், (பெ.) நெருக்கடி நிலை எதிர்நோக்கிய.
emergent
a. வெளிப்படுகிற, திடுமெனத்தோன்றுகிற, எதிர்பாராமல் கிளம்புகிற, அவசரமான, இயல்மலர்ச்சிவழி இயல்பாகத் தோன்றுகிற.
emeritus
n. பொதுப்பணியிலிருந்து மாண்புடன் விடுவிக்கப்பட்டவர்.
emersion
n. தோன்றுதல், மீளல், (வான்.) ஞாயிறு-திங்கள்-விண்மீன் ஆகிய வற்றின் வகையில் ஒளி மறைப்புக்குப் பின்னர் மீளத்தோன்றுதல்.
emery
n. குருந்தக்கல், சாணைபிடிப்பதற்குப் பயன்படும் மிகக் கடினமான கனிப்பொருள்வகை, (வினை) குருந்தக்கல் பொடியினால் தேய், குருந்தக்கல் பொடியை மேற்பரப்பில் பொருத்து.
emery-cloth
n. தேய்ப்புத் துணி, பட்டறைச்சீலை.