English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ditty-bag, ditty-box
கடலோடிகளும் மீன் படவர்களும் துண்டுத்துணுக்குப் பொருள்கள் வைத்துக்கொள்ளும் பை.
diuresis
n. சிறுநீர்போக்கு, மிகு சிறுநீர்ப்போக்குக் கோளாறு.
diuretic
n. சிறுநீர்க் கழிவினைத் தூண்டும் மருந்துச்சரக்கு, (பெயரடை) சிறுநீர்க் கழிவினைத் தூண்டுகிற.
diurnal
n. நாட்குறிப்பேடு, நாள் வழிபாட்டு வேளைக் குறிப்பு, (பெயரடை) நாண்முறையான, நாளுக்குரிய, நாளினுள் செய்யப்படுகிற, (வான்) ஒரு நாளளவில் இயங்குகிற. நாளியக்கமுடைய, பகலுக்கரிய.
div
n. பாரசீகப் புராணகதை மரபுக்குரிய கெட்ட ஆவி, பேய்த்தெய்வம்.
diva
n. பேர் சான்ற பாடகி, இசை நாடகத்தில் தலைமை நடிகை.
divagate
v. சுற்றித்திரி,. வழிவிலகி அலை.
divalent
n. ஈரிணைதிற அணு, ஈரிணைதிறத் தனிமம், இரண்டு ஈரக அணுக்களுடனோ அவற்றிற்குச் சரியாக இரு திறங்களுடனோ இணையும் ஆற்றலுடைய தனிமம் அல்லது அணு, இணைதிறமுடைய இருதிற உருப்படிவங்கயடைய தனிமம், (பெயரடை) ஈரிணை திறமுடைய, இரண்டு நீரக அணுக்களுடனே இணையும் ஆற்றலுடைய, இணைதிறமுடைய இருதிற உருவப்படிவங்கள் போன்ற.
divan
n. உஸ்ர் அரசியல்மன்றம், துருக்கிய அரசியல், மன்றம், நீதிமன்றம், பேரவை, மெத்தை வைதத நீள் இருக்கை உடைய கொலுமண்டபம், மெத்தை வைத்த நீண்ட இருக்கை, சுவரோரச் சாய்விருக்கை, படுக்கையாகவும் பயன்படும் பூந்தவிசிருக்கை, பாடல் திரட்டேடு, புகை குடிக்கம் அறை, புகைச் சு விற்பனைக் கடை, கீழ்த்திசை முதலமைச்சர், கீழ்நாட்டுக் கருவூல அமைச்சர்.
divaricate
a. பெரிதும் விலகிச் சகிற, கவர்வழியான, (வினை) பிரிந்துசெல், கிளைத்துச்செல், கவர்ப்படு, விலகிச் செல், வேறுபட்டுச் செல்.
dive
n. முக்குளிப்பு, நீரில் தலைகீழாகப் பாய்ந்து மூழ்குதல், தலைகீழ்பாய்வு, கழுகுப்பாய்ச்சல், தலைகீழ் வீழ்ச்சி, தலை கீழ்ச்சரிவு, புகலிடம், சுருங்கை, அடிநிலப்பாதை, (வினை) முக்குளி, நீரில் தலைகீழாகப் பாய், மூக்கு, விமான வகையில் காற்றவெளியில் தலைகப்புறப் பாய்ந்திறங்கு, நீர்மூழ்கி வகையில் நீரில் அமிழ், முழகி மறை, அமிழ்ந்து மறைவுறு. திடீரெனக் காட்சியிலிருந்து மறை, நீரில் கையினை அமுக்கு, பையினுள் கை நுழையவிடு, ஆழ்ந்துசெல், காடு முதலியவற்றின் பரப்பில் உள் ஊடுருவிச்செல், ஆழ்ந்தாராய், முழுதும தோய்ந்து ஈடபடு.
dive-bomber
n. வெடிகுண்டு வீறூம் கழுகுப்பாய்வு விமானம், தலைகீழாகச் செங்குத்துப் பாய்ச்சலின்போதே குண்டு விடுத்து மேலெழும் தாக்குதல் வானுர்தி.
diver
n. முக்குளிப்பவர், நீரில் முக்குளிக்கும் ஆற்றல் உடையவர், ஆழ்கடல் குளிப்பாளர், முத்துக்களிப்பவர், நீர்மூழ்கிக் கூண்டினுளிருந்து வேலை செய்யும் ஆழ்கடற் பணியாளர், நீர்முழ்கிக் கவசமணிந்து வேலை செய்யும் கடலடிப் பிணியாளர், மூழ்கிய கப்பல்களைச் சென்றாய்பவர், நீர்மூழ்கிப் பறவை.
diverge
v. விலகிச்செல், இருவேறுபட்டுச் செல், பிரிந்து செல், வெவ்வேறு திசைகளில் இயங்கு, வழிதிறம்பு, பொதுநிலையில் வேறுபடு., தம்முள் வேற்றுமைப்படு. திசை திருப்பு.
divers
a. சில்லறைப்பட்ட, சிலபல, எவையோ சில.
diverse
a. தம்முள் மாறுபட்ட தன்மையுடைய, பல்வேறு வகைப்பட்ட.
diversely
adv. பல்வேறு வழிகளில், வெவ்வேறான வகையில்.
diversify
v. பல்வகைப்படுத்து, ஒன்றுக்கொன்று மாறுபட்ட தன்மையுடையதாக்கு.
diversion
n. வேறுவழிச் செலுத்துதல், கருத்துத் திருப்பம்., மாற்றுக்கவர்ச்சி, பொழுதுபோக்கு, விளையாட்டு, வேடிக்கை, போக்குமாற்றம், திசைமாற்றம்,கவனத்தை வேறுவழியில் திருப்புதல், போக்குக் காட்டி ஏய்ப்பு, மாறாட்டச் சூழ்ச்சி, பாதை பழுதுபட்ட இடத்திடில் சுற்றிச் செல்லும் வழி, மாற்றுவளை நெறி.
diversionist
n. ஏற்றுக்கொள்ளப்பட்ட நேர்படிக் கோட்பாட்டிலிருந்து மாறுபடும் பொதுவுடைமையாளர்.