English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
divisible
a. பகுக்கக் கூடிய, பிரித்துணரவல்ல, எண் வகையில் மற்றோரெண்ணினால் மீதமின்றி வகுபடும் நிலை.
division
n. பிரிதழ்ல், பிரிபு, பிரிக்கப்பட்ட, நிலை, பிரிவினை, ஒற்றுமைக்கேடு, உட்பிளவு, வேற்றுமை, பங்கிடுதல், பங்கீடு, பங்கு பாசம்,. பாகுபாடு, கூறுபாடு, பகுதி, கூறு, வகைப்படுத்தல், வகை, இனப்பிரிவு, கிளை, துறை, படைப்பிரிவு, நாட்டுப்பிரிவு, மண்டலம், வட்டாரத் தொகுதி, சட்ட மாமன்றத்துக்குரிய தேர்தல் தொகுதி, தரவகுப்பு, வகுப்புப்படி இடையெல்லை, இடைவரம்பு, இடைவேலி, இடைத்தட்டி, வாக்கறிவிப்புக்காகச் சட்ட மாமன்றத்தில் மன்றத்தினர் இரண்டாகப் பிரிதல், மாமன்றப் பிரிவீட, (கண) எண்ணெ மற்றொரு எண்ணால் வகுத்தல், வகுத்தல்முறை.
divisor
n. வகுக்குமெண், வகுக்கப்படும் எண்ணில் மீதமின்றி வகுக்குமெண்.
divorce
n. சட்டப்படியான மணவிலக்கு, விவாக ரத்து, பிரிவினை, பிளவீடு, (வினை) திருமண விலக்குச் செய், இணைப்பையறு, மண விலக்குச் செய்து பிரி, தள்ளிவை, விலக்கு, மண உறவினைத் தள்ளுபடிசெய், இணைபிரி, தொடர்புறு, நீக்கு.
divorcee
n. திருமணவிலக்குக்கு ஆளானவர்.
divot
n. குழிப்பந்தாட்டத்தில் ஒரே பந்து வீச்சில் அகழ்ந்தெறியப்பட்ட புல்கரண்.
divulge
v. மறைவெளியிடு, பலரறியக் கூறு.
dixie, dixy
படைத்துறைச் சமையற்கலம்.,*,
dizziness
n. கிறுகிறுப்பு, மயக்கம், தலைசுற்றல்.
dizzy
a. தலைசுற்றுகிற, மயக்கமான, குழம்பிய தலைசுற்றலுண்டாக்குகிற, (வினை) தலைமயக்கமுண்டாக்கு, குழப்பு.
do
-1 n. கேள்வித்தானத்தின் அடிச்சுரம், முதற்சுரம்,
doab
n. இடைத்துறைநிலம், கங்கை யமுனைக்கு இடைப்பட்ட நிலம்.
dobbin
n. பண்ணைவேலை செய்யுங்குதிரை, வண்டி இழுக்குங்குதிரை.
docetism
n. இயேசுநாதர் திருமேனி தசையுடலன்று என்றும் நுண்ணியலாக்கமுடையதென்றும் கொண்ட 2-ம் நுற்றாண்டுக்குரிய சமய முரண்பாட்டுக் கோட்பாடு.
docetist
n. இயேசுநாதர் திருமேனி நுண்ணியலாக்க முடையதென்று கொண்ட 2-ஆம் நுற்றாண்டுக்குரிய முரண்களைக் கிறித்துவ சமயத்தவர்.
doch-andorach, doch-andoris
n. புறப்படுமுன் குதிரைவீரன் குடிக்கும் இன்தேறல், பிரிவு நேர மதுக்கலம்.
dochmiac
a. ஒன்றம் நான்கும் குறிலாகவுள்ள ஐந்தசைச் சீர்களையுடைய.