English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
dib
n. pl. ஆட்டின் கணுவெலும்பு கொண்டு ஆடப்படும் குழந்தை விளையாட்டு வகை, கழங்காட்டம், சீட்டாட்டக் கணிப்புச் சின்னமான வட்டுக்கள்.
dibasic
a. (வேதி) இருகாடி மூலங்களையுடைய, காடி மூலத்தின் இரு அணுக்களையுடைய.
dibber
n. கொத்துக் கருவி.
dibble
n. கொத்துக்கருவி, (வினை) நிலங்கொத்து, கொத்துக் கருவியைக் கையாளு, கொத்துக் கருவியினால் துளையிட்டுச் செடிநடு, தோயவிடு.
dicast
n. பண்டை ஏதென்ஸில் வழக்குமுடிபும் தீர்ப்பும் கூறுதற்குரிய சான்றுநடுவர் குழுவில் ஒருவர்.
dicastery
n. பழைய ஏதென்ஸில் வழக்குமுடிபும் தீர்ப்பும கூறும் சான்றநடுவர் குழு.
dice
n.pl. பகடை, சூதாட்டம், சூதாட்டப் பந்தயத்திலுள்ள இருதலை நிலை, (வினை) சூதாடு, பகடை வைத்தாடு, பெட்டிப் பகடையுருவாக்கு, வண்ணம் மாறிமாறி வரும் கட்டங்களாக இடு.
dice-box
n. நாழிகை வட்டில் போன்ற வடிவுடைய பகடைப் பெட்டி.
dichlamydeous
a. (தாவ) அல்லி வட்டமும் புல்லிவட்டமுமுள்ள.
dichogamous
a. (தாவ) பூவிழைகளும் கருவகமும் வேறு வேறு காலத்தில் பருவமடைகிற.
dichotomy
n. இரண்டாகப் பிரிவுறதல், இரு கவர்ப்பிரிவு முறை.
dichroic
a. இருவண்ணங்கள் காட்டுகிற, இருவண்ண ஒளிக்கோட்டமுடைய.
dichromatic
n. இருவண்ணங்களை மட்டுமே காணக் கூடியவர், (பெயரடை) இருவண்ணமுள்ள, இனத்தில் இருவேறு வண்ணங்கள் இடை விரவி வருகிற.
dichromic
a. இருவண்ணங்களே காண்கிற, மூலவண்ணங்கள் மூன்றில் இரண்டே காண்கிற.
dicker
v. பண்டமாற்று வாணிகம் செய், பேரம் பேசு, பூசலிட்டுப் பேரம் பேசு.
dickey, dicky
ஒற்றைக் குதிரைவண்டியில் போடப்பட்டுள்ள இருக்கையின் தோல் மேலுறை, வண்டியோட்டியின் இருக்கை, வண்டியின் பின்பகுதியிலுள்ள பணியாள் இருக்கை, பொறி வண்டியின் பிற்பகுதியிலுள்ள மடக்கு இருக்கை, சட்டையின் போலி முன்பகுதி.
dicotyledon
n. இருகதுப்பு விதையுள்ள பூக்கம் இனச்செடி.
dictaphone
n. ஒலிப்பதிவுப் பொறி.