English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
diamagnetism
n. குறுக்குக்காந்த ஆற்றல், காந்த அச்சுக்குக் குறுக்காகக் கிழக்க மேற்கத் திசையில் இயங்கும் இயல்புடைய காந்த ஆற்றல் வகை, குறுக்கக்காந்த இயல்பைக் கூறுந்துறை.
diamante
n. பளபளப்பான மின்துகள் ஒளிபிறங்கும் தணிவகை, (பெயரடை) ஆடைகளில் மின்துகள் சுல்ர் வீசுகிற.
diamantiferous
a. வைரக்கல் விளைவிக்கின்ற.
diameter
n. வட்டத்தின் குறுக்களவு, விட்டம்.
diamond
n. வைரம், கனிப்பொருள்களில் உறுதிமிக்க வைரக்கல், மிக உறுதிவாய்ந்த பொருள், கரியப்படிகம், சாய் சதுர வடிவம், சீட்டாட்டத்திற் சாய் சதுரக் கறியுள்ள சீட்டு, ஆங்கில அச்செழுத்தில் 4.5 புள்ளிக் குறிப் பருமனள்ள சிறு எழுத்து வகை, (பெயரடை) வைரக்கல் போன்ற, வைரத்தால் செய்யப்பட்ட, சாய் சதுரக் குறியிடப்பட்ட, சாய்சதுர வடிவுடைய.
diamond-drill
n. வைரத்தூளை நுனியில் உடைய துளைக் கருவி.
diamond-dust
n. வைரத்தூள்.
diamond-field
n. வைரக்கல் விளையும் நிலப்பகுதி.
diamond-hitch
n. பளுவான சுமைகளைத் தாங்குகிற கயிற்றினைக் கட்டும் முறை.
diamond-jubilee
n. மணிவிழா, வைரவிழா, அறுபதாவது ஆண்டுநிறைவு விழா.
diamond-point
n. செதுக்கு வேலையில் பயன்படுத்தப்படும் வைரமுனையுள்ள கருவி, கூர்ங்கோணமுனை, இபுப் பாதையின் கூர்ங்கோணச் சந்திப்பு.
diamond-wheel
n. வைரங்களை மெருகிட்டுப் பளபளப்பாக்குதற்கப் பயன்படும் வைரப்பொடியும்எண்ணெயும் மேற்பரப்பிலிட்ட சக்கரம்.
Dian, Diana
பண்டை ரோமாபுரியில் நிறைக்கம் வேட்டைக்கும் உரிய தெய்வமாகக் கருதப்பட்ட திங்களஞ்செல்வி, வேட்டையாடும் அணங்கு, குதிரைமீதிவர்ந்த மாது.
diapason
n. சுரங்கள் எழு கடந்த எட்டன் வடடம், முழு வட்டப்பாலை, உச்சக்குரலிசைப்பு, குரல் முழு ஏற்றத்தாழ்வளவு, இசைக்கருவியின் முழு ஏற்றத்தாழ்வெல்லை, முழு நிறை சுரங்கள் அடங்கிய ஒத்திசைவமைதி, முழுநிறை இன்னிசை எழுச்சியளவை, இசை மேளத்தின் முழுநிறை தடையுறுப்பு, ஆற்றலெல்லை, முழு வீச்செலலை, நிலையான மதிப்பளவை.
diaper
n. மணியுருவப் பூவேலை செய்யப்பட்ட துணி, மேசைத்துகில், கைத்துண்டு, குழந்தை அணையாடை, சாயம் தோயாத வண்ணப் பின்னல் சித்திர வேலை, உட்செதுக்குச் சித்திரச் சிற்பவேலை, (வினை) பல்வண்ணச் சித்திர வேலைப்பாடுசெய்.
diaphoresis
n. செயற்கையாகத் தூண்டப்படும் வியர்வை.
diaphragm
n. உந்து சவ்வு,. ஈரலுக்கும் குடலுக்கும் நடுவேயுள்ள சவ்வு, இடையீட்டுச் சவ்வுத்திரை, சிப்பி செடியினங்களின் இடையீட்டுத்தாள் திடிரை, ஒளியின் பரவுகதிர் தடுக்கவல்ல மையப்புழையுடைய உலோகத்தகடு, தொலைபேசியிலும் தந்தியில்லாக் கம்பியிலும் பயிலும இடையீட்டுத் தகடு.
diaphragmatitis
n. ஈரல் தாங்கியின் அழற்சி.
diapphoret;ic
n. செயற்கை வியர்வை முறை, வியர்க்கச் செய்யும் மருந்து, (பெயரடை) செயற்கையாக வியர்க்கச் செய்கிற.