English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
diadem
n. மணிமுடி, மகுடம், முடியின் கவிவு, தழைமுடி, மலர்க்கண்ணி, முடிமாலை, ஆட்சித்தலைமை உரிமை.
diaeresis
n. இணையுயிரெழுத்துக்களில் இரண்டாம் உயிருக்கம் தனி ஒலிப்பு உண்டு என்பதற்காக அதன்மேல் இருபுள்ளியிட்டுக் காட்டும் ஒலிக்குறிப்பு அடையாளம்.
diagnosis
n. நோய் ஆய்வுறுதி, நோயாளியின் புறக்குறிகளின் உதவியால் நோய் அறுதியிடல், நோய் அறுதி விளக்கப்பதிவு, ஆளின் கணங்கறிவகை விளக்கம்.
diagnostic
n. நோய்க்குறி, நோயின் புற அடையாளம், (பெயரடை) வேறுபரத்திக் காண உதவுகிற, நோய்க்கமூலம் நோயறுதி செய்கிற.
diagonal
n. மூலைவிடடக் கோடு, வரைகட்டங்களில் நேரிணையல்லாத கோணங்களை இணைக்கும் வரை, தளக் கட்டங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கம் ஊடுதளம், சதுரங்கக் கட்டத்தில் மூலைச்சாய்வு வரிசைக் கட்டம், சாய்கரை ஆடை, (பெயரடை) வரைகட்டங்களில் ஒட்டடுத்தில்லாத கோணங்களை இணைக்கிற, வரைதளங்களில் நேரிணையல்லாத விளிம்புகளை இணைக்கிற, மூலைவாட்டான, சாய்வான.
diagram
n. விளக்க வரைப்படம், எண்பிப்பு வரையுரு, குறிப்பு விளக்க வளைவு, தானே இயங்கம் சுட்டுமுள் வரைவுப் பதிவு.
diagraph
n. சித்திரப்படிவுக் கருவி.
dial
n. கதிரவன் நிழற்சாய்வின் மூலம் மணியறி கருவி, மணிப்பொறியின் முப்ப்பு, அளவை சுட்டுமுகப்பு, சுரங்கத் தொழிலாளரின் திசையறி கருவியுடன் இணைந்த கூர் நோக்காடி, தொலைபேசியின் எண்வட்டு, (வினை) அளவையிட்டுணர், அளவை மதிப்புக்காட்டு, தொலை பேசியின் சுழல்வட்டு இயக்கு, தொலைபேசிமூலம் பேச்சுத் தொடர்பு கொள்.
dial-plate
n. கடிகாரத்தில் உட்புறக் கருவிகள் ஒருநிலையில் இயங்கத்தக்க தன்மையில் பொருத்தப்பட்டிருக்கும் கவசத் தகடு.
dialect
n. பேச்சுவழக்கு வகை, திசை வழக்க, குழு வழக்கு, தனி வழக்கு, வழக்கத்துக்கு மாறுபட்ட தனிமுறைப்பேச்சு வகை, கிளைமொழி.
dialectic
-1 n. புலன்கடந்த மெய்ம்மை முரண்பாட்டு விளக்க ஆய்வுத்துறை.
dialectical
a. வாதஞ்சார்ந்த, சொற்போர் முறையான, பேச்சு வழக்குக்குரிய, திசைவழக்கச் சார்ந்த, வாதப் பொருத்தமுடைய, தருக்கமுறைப்பட்ட, புலன்கடந்த மெய்ம்மை முரண்பாட்டு ஆய்வுத்துறைக்கரிய.
dialectics
n. pl. வாதமுறைப்படி உண்மையை ஆய்தல், அளவையாய்வு.
dialogic
a. உரையாடலிலுள்ள, உரையாடலைச் சார்ந்த.
dialogist
n. உரையாடல் முறையிற் பேசுபவர், உரையாடல் முறையில் எழுதுபவர்.
dialogue
n. உரையாடல், உரையாடல் வடிவ இலக்கியம்.
dialysis
n. (வேதி) இடைச்சவுவூடானப் பரவச்செய்து பொருள்களைப் பிரித்தல், கலவைப் பிரிப்பு, பிரிவினை, பொருள்களைப் பிரித்தல், (இலக்) இணை உயிரின் இரண்டாம் உயிர் தனி ஒலிப்புடையதென்று காட்ட அதன்மீதிடப்படும் இரு புள்ளி அடையாளம்.
dialytic
a. (வேதி) இடைச்சவுவூடான பிரிவினை சார்ந்த இடைச்சவ்வூடான பிரிவின் பயனான.
diamagnetic
a. குறுக்கக்காந்த ஆற்றலுள்ள, காந்த அச்சுக்குக் குறுக்கே கிழக்கு மேற்காக இயங்கம் இயல்புடைய.