English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
drum-ond-light
n. காப்டன் டி,டிரம்மண்ட என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளொளி அல்லது உயிரக-நீரக ஒளி.
drum-stick
n. முரசுகொட்டுவதற்கான குமிழ் நுனியுடைய கோல், சமைத்த கோழிக்காலின் கீழ்மூட்டு, முருங்கைக்காய்.
drumfire
n. காலாட்படைத்தாக்குதலுக்கு முன் நிகழ்த்தப்படும் பீரங்கிகளின் முழங்கொலி வேட்டுத் தீர்வு,
drumhead,
முரசுத்தோல், செவிப்பறைச்சவ்வு, பாரஞ்சாம்பியின் வட்டத்தலையுறுப்பு.
drunk
n. குடிவெறி, குடித்தல் (காவல்துறைக்குற்றத் தாள்) குடிவழக்கு, குடித்ததாகக் குற்றம் சாட்டப்படவர், கள் முதலியன குடித்தவர், (பெயரடை) வெறியுண்ட, கட்குறியல் மூழ்கியிருக்கிற, பொங்கும் உணர்ச்சியில் மூழ்கிய.
drunkard
n. குடிகாரர், குடிப்பழக்கமுள்ளவர், போதையேறக் குடிப்பவர்.
drunken
a. குடிபோதையிலிருக்கிற, அறிவுமயக்கிய, குடிப்பழக்கமுள்ள, குடிபோன் விளைவான., குடிபோதையிலிருப்பதைக் காட்டுகிற, பயனற்ற.
drunkenness
n. குடிபோதை, வழக்கமாகக் குடிபோதையிலிருத்தல்.
drupaceous
a. (தாவ) உட்கொட்டை சூழ இனசதைச் சாறு உடைய கனிகளை விளைவிக்கிற.
drupe
n. கொட்டையுடைய இன்தசைச்சாறு, கொண்ட கனி.
drupel, drupelet
(தாவ) பல்சுளைக் கொட்டைகயடைய கனியின் ஒருசுளைக் கொட்டை.
druse
-1 n. பாறைக்குழிவின் உட்புறத்தைப் போர்த்துள்ள மணியுறைவுத்தோடு, மணியுறைவுத்தோட்டினால் உட்புறம் போர்த்தப்பெற்றுள்ள பாறைக்குழிவு.
Druse,
-2 n. சிரியாவில் உள்ள லெபனான் மலைகளில் பாவம் மகம்மதிய சமயம் சார்ந்த அரசியல்-சமயப் பிரிவினர்.
dry
n. மதுவிலக்கக் கோட்பாட்டாளர், (பெயரடை) வறண்ட, வற்றிப்போன, நீர்ப்பசையற்ற ஈரமில்லாத, ஈரம் குறை சாறு குறைவான, மழையில்லாத, மழைகுறைவான, நீர்வேட்கையுள்ள, நில வகையில் புன்செயான, பயிர்வகையில் புன்செய் வகை சார்ந்த, மழையின்றி உலர்ந்த, நீர்நிலையினின்றம் மொலைவான, நீர்வராத, கால்நடை வகையில் பால் தராத, கெட்டிப் பொருளான, பழக்கத்தில் சதைப்பற்றில்லாத, நீர்ப்பொருளாயிராத, நீரியல்லாப் பொள்களைஅளப்பதற்குரிய, பசுமையற்ற, சாரமற்ற, அப்பவகையில் வெண்ணெய் தடவப்பெறாத, சாவு வகையில் நீரினால் அல்லது குருதி சிந்தப்பெற்று வராத, காசவகையில் கபமற்ற, மது வகைகளில் இனிப்போ பழத்துக்குரிய நறுமணமோ அற்ற, நாடு-நாட்டுப்பகுதி முதலியவற்றின் வகையில் மதுபான வாணிகத்தைச் சட்டப்படி தடை செய்கிற, மதுவிலக்கினைச் செயலாற்றுகிற, மதுவிலக்குக்கு உட்பட்ட, எழுச்சியற்ற, கவர்ச்சியற்ற, சுவையற்ற, பயனற்ற, அன்பற்ற, உணர்ச்சியற்ற, கண்டிப்பான, கடுமையான, ஒத்துணர்வற்ற, கனிவற்ற, பராமுகமான, கரிசனையற்ற, வெறுமையான, புனையப்படாத, காய்தலுவத்தலில்லாத, சிறப்பற்ற, பொதுப்படையான, (வினை) உலர்ந்து, நீர்ப்பசையற்ற, வறு, வறட்டு, வாட்டு, வற்றலாக்கு, வாடு, வற்று.
Dry cleaners
உலர் வெளுப்பாளர், உலர் சலவையகம்
dry-clean
v. உலர்வுச் சலவைசெய், நீரிற் கழுவாமல் சாராயச் சத்து முதலியவற்றால் தூய்மையாக்கு.
dry-dock
n. நீரின்றி றறிடமாக்கப்படக்கூடிய கப்பல் துறை, (வினை) நீர் வெளியயேற்றப்பட்ட துறையில், நிறவு.
dry-fist
n. கஞ்சத்தனமானவர்.
dry-fly
a. நீரில் அமிழாத செயற்கை இரை வாய்ந்த தூண்டில் முள்ளையுடைய, (வினை) நீரில் அமிழாத செயற்கை இரையுடன் துண்டிலிட்டு மீன்படி.