English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
dross
n. உருக்கிய உரேலாகக் கழிவு, மாசு, களிம்பு, துரு, கசடு, கழிவுப்பொருள், கலப்படத்தில் கலக்கப்பட்ட அயற்பொருட்கூறு, சக்கை, சவறு, தீயவழியில் ஈட்டிய பணம்.
drossy
a. கசடு போன்ற, தூய்மையற்ற, பயனற்ற.
drought
n. வறட்சி, கருப்பு, நீடித்த பஞ்சநிலை, மழையின்மை, நீரின்மை, காய்வு, வெப்பு, நீர்வேட்கை.
droughty
a. மிகுவறட்சியுள்ள, மழையற்ற, நீர்வேட்கையுள்ள.
drove
-1 n. மேய்ச்சல் மந்தை, மீன்திரள், கும்பு, கூட்டம், கலதச்சனது அகன்ற உளி.
drover
n. கால்நடை மந்தைகளைச் சந்தைக்கு ஒட்டிச் செல்பவர், கால்நடை வணிகர்.
drowse
n. அரைத்தூக்க நிலை, (வினை) தூங்கிவிழு, தூங்கிவழி, சோம்பியிரு, மந்தித்திரு, தூங்கிவிழச்செய், உணர்வு மழுங்கச் செய், தூங்கி விழுந்து காலங்கழி.
drub
v. மொத்து, தடியால், அடி, நையப்புடை, சண்டையில் தோல்வியுறச்செய், கருத்தை அறைந்து செலுத்து,
drubbing
n. தடியாலடித்தல்.
drudge
n. ஊழியவேலை, அடிமைவேலை, கொத்தடிமை, தொண்டுழிய வேலையாள், குறைந்த கூலிக்கு நிறைந்த வேலைசெய்து காலந்தள்ளுபவர், (வினை) அடிமைவேலை செய், குற்றேவல்புரி,. தொண்டுழியம், செய்.
drudgery, drudgism
அடிமைவேலை., மட்டுமீறிய உழைப்பு, சுவையற்ற வேலை, கடுந்தொழில்,*,
drug
n. மருந்துச் சரக்கு, வெறிமயக்கப்பொருள், விலை போகாப்பண்டம், (வினை) வெறிமயக்க மருந்து சேர்த்துக் கலப்படம் செய், வெறிமயக்கமருந்தூட்டு, மருந்து கொடு, மயக்கப் பொருள்களை வழக்கமாய் மிகுதியாக உட்கொள்ளுவி, அருவருப்பூட்டு, உவர்ப்பூட்டு.
Drug stores
மருந்துப் பண்டகம், மருந்துக் கடை
drugget
n. முரட்டுக்கம்பளித்துணி, நிலத்தளத்திற் பரப்பு தற்கான இரட்டுத்துணி, மேசைத்துணி,
druggist
n. மருந்துக்கடைக்காரர் மருந்துச் சரக்ககளில் வாணிகம் செய்பவர், மருந்து செய்து விற்பவர்.
druidism
n. கெல்டிக் இனக் குருமார் கற்பித்த கோட்பாடுகள், கெல்டிக் இனக் குருமார் கையாண்ட வினை முறைகள்.
Drujd
n. பண்டைய கெல்டிக் இனத்தவரின் குரு வகுப்பினர், கெல்டிய மந்திரவாதி, கெல்டிக் இனக் குறிகாரர், வேல்ஸ் நாட்டு மாமன்றப்பணியாளர்.
drum
-1 n. முரசு, முரசொலி, முரசடிப்பவர், முரசொலி போன்ற நாரையினக் கூக்குரல்,முரசொலி போன்ற ஒலி எழுப்பும் அமெரிக்க மீன் வகை, உட்செவியுறுப்பு,காதுக் குருத்து, ஊளையிடும், குரங்கினத்தின் உண்ணாக்கெலும்பு முரசு வடிவப் பொருள், மிடா, இயந்திரத்தின் சுழல் வட்டுருளை, இழைகளைச் சுற்றிவைக்கப்பயன்படும் குக்ஷ்ல் வட்டு, மாலை அல்லது பிற்பகல் தேநீர் விருந்து, (க.க) கிவகைமாடத்தின் செங்குத்தான பகுதி, கொரிந்திய பாணித் தூண் தலையுறுப்பின் கெட்டியான பகுதி, (வினை)முரசு முழக்கு, முரசொலி எழுப்பு கைவிரல்களால் தாளங்கொட்டு, காலாலட் மேளங்கொட்டு, முரசொலிப்புப் போன்று இரை, இடைவிடாதடி, தட்டு, கொட்டு, பறவைகள் பூச்சிகள் வகையில் முரசடிப்பது போல இறக்கைகளை அடித்து ஒலியெழுப்பு, முரசு முழக்கி வெளியேற்று, முரசொலி மூலம் அழைப்புவிடு, அடித்தடித்து உருவேற்று, அடுத்தடுத்துச் சொல்லிப் புகட்டு, விடாது செய்து வெறுப்பூட்டு.
drum-major
n. முரசு அணியின் இளம்படித்தலைவர்.