English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bisexual
a. இருபால் உறுப்புக்களையும் ஒருங்கே உடைய, இருபால் கூறுள்ள, இருபால் கூறுபாடுடைய.
bishop
n. மேற்றிராணியார், சமய வட்டத்தலைவர், மாவட்டச் சமய முதல்வர், தலைமைக்குரு, சதுரங்க ஆட்டத்தில் ஒட்டகத்துக்கிணையான காய், மணப்பொருளிட்டு வடித்துக் காய்ச்சிய மதுவகை, தூக்கணங்குருவி வகை, (வினை) சமய வட்டத் தலைவராக நடி, சமய வட்டத்தலைவரின் உரிமை நடைமுறைப்படுத்து, தீக்கையளி.
bishopdom
n. சமய வட்டத்தலைவரின் ஆட்சி எல்லை சமய வட்டத்தலைவர் பதவி.
bishopric
n. மேற்றிராசனம், சமயவட்டத் தலைவரின் ஆட்சி அலுவலகம், சமய வட்டத்தலைவரின் ஆட்சி எல்லை.
bismar
n. நிறைகோல், வெள்ளிக்கோல்.
Bismillah
int. அல்லாவின் திருப்பெயரால்.
bison
n. காட்டெருது, ஆன்.
bisqud
-2 n. மெருகு முடிவுறாத பீங்கான் வகை, முதற்படியளவில் சுடப்பட்ட மட்கலம்.
bisque
-1 n. மீன் வகையின் சூப்பு, மீன் சாறு.
bissextile
n. நாள் மிக்க ஆண்டு, (பெ.) நாள் மிகையான.
bistort
n. ஊன்வண்ண மலர்களும் திருகிய கிழங்கும் உடைய செடிவகை.
bistoury
n. (மரு.) ஒடுங்கிய அறுவைக் கத்தி.
bistre
n. புங்கமரத்தின் புகைக்கரியிலிருந்து உண்டுபண்ணப்படும் செந்தவிட்டு நிற வண்ணப்பொருள், (பெ.) செந்தவிட்டு நிறமான.
bistred
a. செந்தவிட்டு வண்ணந் தோய்க்கப்பட்ட.
bisulcate
a. பிளவுப்பட்ட, கவரடிவாய்ந்த, இரண்டு சால்வரிகளையுடைய.
bit
-1 n. சிறு துண்டு, துணுக்கு, கவனம், அமெரிக்க நாணயம், மிகக்குறைந்த அளவு, கணம், குறுகிய நேரக்கூறு, தமருசி, துளைக்கருவி, துளைப்புப் பொறியின் நுனி, கடிவாளத்தின் வாயிரும்புப் பகுதி, வெட்டிரும்பு, இடுக்கியின் வாய், (வினை) வாயில் கடிவாளம் மாட்டு, கடிவாளமிட்டுப் பழக்கு, அடக்கு.
bit(2), v.bite
என்பதன் இறந்தகால வடிவம்.