English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bitts
n, pl. கப்பல் தளத்தில் கயிறுகள் கட்டுவதற்கான இரட்டைக் கம்புகள்.
bitulithic
n. உடைந்த கற்களாலும் நிலக்கீலாலும் பாவப்பட்ட நிலத்தளம், (பெ.) உடைந்த கற்களாலும் நிலக்கீலாலும் பாவப்பட்ட.
bitumen
n. நிலக்கீல், எளிதில் தீப்பற்றக்கூடிய கனிப்பொருட்குழுவில் ஒன்று.
bituminate
v. நிலக்கீலோடு கல, நிலக்கீல் பூசு.
bituminiferous
a. நிலக்கீல் அடங்கிய.
bituminous
a. நிலக்கீலார்ந்த.
bivalent
a. (வேதி.) ஈரிணைத் திறமுடைய.
bivalve
n. இருதோடுடைய சிப்பி போன்ற உயிரினம், சிப்பி போன்ற விதை வகை, (பெ.) இருதோடுடைய.
bivalved, n. bivalvular
a. இருதோடு உடைய.
bivium
n. முள்ளிப்பி வகையில் இரு கால் நாளங்களையுடைய ஒருபக்கப் பகுதி.
bivouac
n. படைவீரர்கள் வெட்டவெளியில் இராத்தங்குதல், (வினை) வெட்ட வெளியில் இரவைக்கழி.
bivouacked, v.bivouac
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
bivouacking, v.bivouac
என்பதன் தொடரெச்ச வடிவம்.
biweekly
n. வார இருமுறை வெளியீடு, இருவார ஒரு முறை வெளியீடு, (பெ.) வாரத்திற்கு இருமுறையான, இருவாரங்களுக்கு ஒருமுறையான, (வினையடை) வாரமிருமுறையாக, இருவாரங்கட்கு ஒருமுறையாக.
biz
n. (பே-வ.) தொழில் முறை.
bizarre
a. இயற்கை கடந்த, இயல்புக்கு மீறிய, நம்பத்தகாத, எல்லைமீறி மிகைப்பட்ட, கட்டற்ற புனைந்துரையான, புதுமை வாய்ந்த.
bizarrerie
n. கழிமிகு புனைவு, நம்பமுடியாப்பண்பு.
bizone
n. இரண்டாம் உலகப்போரில் (1ஹீ3ஹீ-1ஹீ45) பிரிட்டிஷ் அமெரிக்க ஆட்சி மண்டலங்கள் இரண்டினுக்கும் உரிய அரசியல் பொருளியல் அரங்கக்கூறு.
blab
-1 n. மறைவெளியிடுபவர், (வினை) மறை வெளியிடு, உளறு, பதற்று.
blabber
-1 n. மறைவெளியிடுபவர், உளறுவாயர்.