English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Birminghamize
v. செயற்கையாகச் செய், போலியாக இயற்று.
birostrate
a. இரட்டையான அலகுடைய.
Birrelism, Birrellism
n. அகஸ்டின் பிரெல் என்ற ஆங்கில எழுத்தாளரின் பண்பு, அன்பார்ந்த கூர்வசை இயல்பு.
birth
n. பிறப்பு, பிறத்தல், பெறுதல், ஈன்றெடுத்தல், பேறு, ஈற்று, குடிப்பெருமை, தோற்றம்,தொடக்கம், உயர்குடி மரபு.
birth-control
n. கருத்தடை, பேற்றுக்கட்டுப்பாடு.
birth-mark
n. பிறவிக் குறி, பிறக்கும்போது உடலில் காணப்படும் தனிப்பட்ட அடையாளம்.
birth-place
n. பிறப்பிடம்.
birthday
n. பிறந்தநாள், வெள்ளணி நாள்,
birthright
n. பிறப்புரிமை.
bis
adv. இருமுறை, இருதடவை, (இசை.)மறுமுறை பாடுவதற்குரிய அடையாளக்குறி.
bis dat qui cito dat,
(ல.) விரைவில் நன்கொடையளிப்பவர் இருமடங்கு கொடுத்தவராவார்.
Biscayan
n. நீண்ட கனமான துப்பாக்கி, துப்பாக்கிக் குண்டு, (பெ.) ஸ்பெயின் நாடடின் பிஸ்தே மாகாணத்தைச் சார்ந்த, பாஸ்க் இனத்துக்குரிய.
biscuit
n. மாச்சில்லு, மாப்பண்டம், மெருகு வரா நிலைப் பீங்கான் துண்டு, படைவீரர் படுக்கைக்கூறு, (பெ.) இளந்தவிட்டு நிறமான.
Biscuits
ஈரட்டிகள் (உரொட்டிகள்)
bise
n. சுவிட்சர்லாந்துப் பகுதியில் வீசும் கொடுங்குளிர் வடகாற்று.
bisect
v. ஒத்த இரு பகுதிகளாகப் பிரி.
bisection
n. ஒத்த இரு பிரிவுகளாகப் பிரித்தல்.
bisector
n. பிரிகோடு, இரு சம கூறாக்கும் கோடு.
bisegment
n. ஒரு கோட்டினையோ உருவினையோ ஒத்த இரு பகுதிகளாக வெட்டிப்பிரித்தல்.
biserrate
a. (தாவ.) இருபுறமும் வாள்போன்ற பற்களுடைய.