English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
ben-nut
n. முருங்கை விதையின் பருப்பு.
ben-oil
n. முருங்கை விதையின் பருப்பு.
bename
v. பெயரிடு, குறிப்பிடு, சூளுரை.
bench
n. மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை, விசிப்பலகை, படகில் உட்காருமிடம், நடுவர் இருக்கை, நடுவர்நிலை, நீதிமன்றம், அதிகாரியின் இருக்கை, நடுவர் ஆயம், குற்ற நடுவர் ஆயம், பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள, தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை, மதிலின் பிதுக்கம், நிலப்படிக்கட்டு, (வினை) இருக்கையில் அமர்த்து, விசிப்பலகைகள் அமைத்துக்கொடு, நாய்களைக் காட்சிககு வை.
bench-mark
n. மட்டக்குறி, நில அளவைக்காரர்கள் தங்கள் அளவைமட்டத்துக்கு மூலக்குறியாகப் பாறை-கல் போன்றவைகளின் மீது வெட்டும் அடையாளம்.
bench-warrant
n. நடுவர் பிறப்பிக்கும் பற்றானை.
bencher
n. இங்கிலாந்து வழக்கறிஞர் மன்றத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்.
bend
-1 n. வளைத்தல், வளைவு, வளைந்தபகுதி, கொக்கி, கொளுவி, குனி, திருப்பம், வணக்கம், (வினை) வளையவை, வளை, சாய்வி, சாய், கோணச்செய், கோணு, குனி, தளர், தொய், புருவம் கோட்டு, திருப்பு, திரும்பு, திணி கீழடங்கு, தாழ்ந்துபோ, அடங்கு, முடிச்சிடு.
bended
a. பட்டைபோட்ட, வளைந்த.
bending
n. வளைக்கும் செயல், (பெ) வளைக்கிற.
bendlet
n. (கட்.) அரை அகல வளைவுப் பட்டை.
bends
pl. (பே-வ.) இறுக்கமான காற்றில் வேலைசெய்பவர்களுக்கு வ நோய்வகை.
beneaped
a. மென்திரையால் கரைமீதிடப்பட்ட.
beneath
adv. கீழே, அடியில், அடிப்புறத்தில், தாழ, உட்புறத்தில், பின்னால், புறத்தே, கீழாக, அடியில், பெருமைக்குத் தகாதவாறு, தகுதியற்று.
benedicite
n. (ல.) வாழ்த்துமுறை நேர்வு, உணவுக்கு முன்னிய வழிபாட்டுரை, வேண்டப்பட்ட ஆசி.
benedick
n. மணமகன், நீண்டகாலம் மணம்செய்துகொள்ளாமலிருந்து புதிதாக மணம்செய்து கொண்டவர்.
benedict
n. போற்றுதற்குரிய, கருணைவாய்ந்த.
Benedictine
தூயதிரு. பெனிடிக்டு 52ஹீ-இல் கண்ட திருமடத்தைச் சேர்ந்த துறவி, நறுமண மது வகை, (பெ) தூயதிரு. பெனிடிக்கு கண்ட திருமடத்துக்குரிய.
benediction
n. வாழ்த்து, திருக்கோயில் ரோமன் கத்தோலிக்க வழிபாட்டின் பின்னர் ஆசி வழங்கில், ஆசி, பேரின்பநிலை.
benedictional
a. வாழ்த்து வழங்குவது பற்றிய.