English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
benevolence
n. அறச்செயல் விருப்பம், இரக்க மனப்பான்மை, அன்புச்செயல், பணவிதவி, (வர.) கட்டாயக் கல்ன்.
benevolent
a. நற்செயலாற்றும் விருப்பமுள்ள, இரக்க மனப்பான்மை கொண்ட, பரந்த உள்ளமுடைய, இன்முகங்கொண்ட.
Bengal-light
n. கப்பல் இடர் அறிவிப்புக்கான வாணவெடி, விழா வாணவெடி.
Bengalee, Bengali
வங்கநாட்டவர், வங்கமொழி, (பெ.) வங்கம் சார்ந்த.
benight
v. இருளில் ஆழ்த்து, இருளில் சிக்கவை, ஏமாற்றிக் கலங்கச் செய்.
benighted
a. இருளில் சிக்கிய, இருளார்ந்த, அறியாமை வயப்பட்ட, பாழ்பட்ட, கேடுற்ற.
benign
a. சாதகமான, பெருந்தகைமையுள்ள, அன்பான, கண்ணோட்டமுடைய, நற்பேறுள்ள, நலம் செய்கிற, நோய்வகையில் கடுமையாயிராத, தணிவான, ஏதம் விளைக்காத.
benignancy
a. அருளிரக்கம், பெருந்தகைமை.
benignant
a. அருளுடைய, அன்புடைய, நலம் பயக்கிற.
benignity
n. அருளுடைமை, அன்புடைப் பண்பு, பண்புடைமை, நோயின் தணிநிலை, வானிலை வகையில் ஆக்கந்தரும் சூழ்நிலை.
benison
n. வாழ்த்து, கடவுள் ஆசி.
benjamin
-1 n. சாம்பிராணி.
benjamin-tree
n. சாம்பிராணி மரம், நறுமணப்பட்டையுடைய வட அமெரிக்கப் பூடுவகை, அத்திமர வகை.
bennet
-1 n. மஞ்சள் நிற மலர்களையுடைய பூண்டு வகை.
bent
-1 n. கம்பி போன்ற தண்டுடைய நாணபுல்வகை, புல்லினத்தின் விறைத்த மலர்த்தண்டு, உலர்ந்த பழம்புல், களைப்பூடு வகை, புதர், வேலியில்லாத புல்தரை, மலைச்சரிவு.
bent(3), n. bend
என்பதன் இறந்தகால முடிவெச்ச வடிவம்.
Benthamism
n. மிகப்பெரும்பாலோருக்கு மிகப் பேரளவான இன்பமே குறிக்கோளாகக் கொண்ட ஜெரிமி பெந்தம் என்பாரின் அறமுறைக் கோட்பாடு.
Benthamite
n. மிகப்பெரும்பாலோருக்கு மிகப்பெரிய அளவில் இன்பம் நாடும் அறமுறைக் கோட்பாட்டாளர்.
benthic
a. கடல் அடியிலுள்ள மாவடை மரவடைகளுக்கு உரிய.
benthos
n. கடல் அடியிலுள்ள, செடிகொடி உயிரினத்தொகுதி.