English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
Belgravia
n. லண்டன் நகரைச் சேர்ந்த புதுநாகரிகக் குடியிருப்பிடம்.
Belgravian
a. லண்டன் நகரைச் சேர்ந்த பெல்கிரேவியா என்னும் புதுநாகரிகக் குடியிருப்புக்குரிய, நாகரிக வாழ்வுக்கு உரிய, ஆரவார முறையில் அமைந்த.
Belial
n. பேய், தீயவை புரியும் ஆவியுரு.
belie
v. பொய்ப்படுத்து, பொய்யாக்கு, பொய்யெனக் காட்டு, ஒன்றைப்பற்றைத் தவறான கருத்துத் தெரிவி, நிறைவேற்றத் தவறு, தகுதியை இழ, போலியாக்கு.
belief
n. நம்பிக்கை, கோட்பாடு, எண்ணம், கருத்து, உணர்வு, உண்மையென ஒப்புக்கொள்ளுதல், நம்பிக்கை வைத்துள்ள பொருள், சமயம்.
believe
v. நம்பு, ஆளிடம் நம்பிக்கைகொள், சொல்லில் அல்லது கழுத்தில் நம்பிக்கையை, உண்மையென ஒப்புக்கொள், பயனுள்ளதெனக் கருது, நிலைபேறுடையதென எண்ணு, கருத்தில்கொள், மதிப்பு நலமுடைய கருது.
believer
n. நம்புபவர், சமய ஏற்பாளர், மெய்க்கோட்பாட்டாளர்.
believing
a. நம்புகிற, நம்பிக்கை கொண்டிருக்கிற.
Belishabeacon
n. நடந்து செல்பவர்கள் தெருவைக் கடந்தற்குரிய இடத்தைக் குறிப்பதற்காக உச்சியில் மஞ்சள் கோளத்துடன் அமைக்கப்பட்டுள்ள கம்பம்.
belittle
v. பொருளல்லவென்று கருது, சிறுமைப்படுத்து, இகழ், புறக்கணி, மதிப்பைக்குறை, சிறிதாகத் தோற்றுவி.
bell
-1 n. மணி, மணிபோன்ற வடிவுடைய மலரின் அல்லி வட்டம், மணியோசை, தூணின் பொதிகை, கடல் மூழ்குபவர் வழங்கும் மணிக்கூண்டு, ஆய்கள மணிக்கவிகைச்சாடி, இசைப்பேழையின் ஒலிமுகவாய், மணியோசையின் குறிப்பு, (கப்.) கடிகாரத்தில் மணி-அரைமணி முதலியவற்றைக் காட்டும் மணியடிப்போசை, (வினை) மணி கட்டு.
bell-bottomed
a. கணுக்காலை நோக்கி விரிவடைகிற.
bell-buoy
n. எச்சரிக்கை மணிமிதவை, அலை அசைவுகிளனால் அடிக்கப்பெறும் மணி பொருத்தப்பெற்றுள்ள கடல் மிதப்புக்கட்டை.
bell-crank
n. இரட்டை நெம்புகொண்டி.
bell-flower
n. மணிவடிவ மலர்ச்செடிவகை.
bell-founder
n. மணிகளை வார்ப்பவர்.
bell-glass
n. மணிக்கவிதை, செடிகளை மூடி வைப்பதற்கான மணிவடிவக் கண்ணாடிக்கலம்.
bell-hanger
n. மணிகளைக்கட்டுபவர், மணிகளைச் செப்பனிடுபவர்.