English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
behaviour
n. நடக்கை, ஒழுகலாறு, ஒழுக்கம், நல்லொழுக்கம், பிறரை நடத்தும் முறை, வாழ்க்கையின் போக்கு, இயங்குகிற முறை, தொழிற்படுகிற வகை.
behaviourism
n. ஒழுக்கக்கொள்கை, அகப்பண்புகளுக்குப் புறவாழ்வுக்கூறுகளே காரணம்என்ற கோட்பாடு, (உள.) புறக்கூறுபாடுகளைக் கொண்டும் ஒழுக்கத்தைக் கொண்டும் ஒருவரைப்பற்றி ஆராயும் முறை.
behaviourist
n. அகப்பண்புகளுக்குப் புறவாழ்வுக் கூறுகளே காரணம் என்னும் கோட்பாட்டாளர், (உள.) புற வாழ்வுக் கூறுபாடுகளை ஆராய்ந்து அகத்தின் பண்புகளை உணர முயலுபவர்.
behead
v. தலையை வெட்டு, தலைவாங்கும் தண்டனையளி, தூக்கிலி.
beheding
n. தலைவாங்கல், தூக்கிடல்.
beheld, v. Behold.
என்பதன் இறந்தால-முடிவெச்ச வடிவம்.
behemoth
n. (விவி.) மிகப்பெரிய பழங்கால விலங்குவகை, நீர்பெரும் பகடு.
behest
n. (செய்.) கட்டளை.
behind
n. பின்புறம், பின்பகுதி, பிட்டம், (வினையடை) பின்னால், பின்பக்கமாக, பின்னோக்கி, பின்னணியில், பின்வு, பிற்பட்ட சென்ற காலத்தில், முந்தி, பின்னல், ஆதரவாக, பின்பற்றி, அடுத்து, அப்பால், தொலைப்பக்கத்தில், பிந்தி, அடுத்தபடியாக, அடுத்த கீழ்ப்படியில், பின்னடைந்து, மறைந்து, மீப்பாக, எச்சமாக, சேமிப்பாக, இருப்பாக.
behind-door
a. கரவான, கள்ளத்தனமான.
behind-hand
a. பிற்பட்ட, பிந்தியா, பிந்துகிற, காலந்தாழ்த்துகிற, காலத்துக்கொள்வாத, காலநிலைக்குப் பிற்பட்ட பழமைப்பட்ட, வாய்ப்பு வளமற்ற, பாக்கி வைத்துள்ள, (வினையடை) காலப்பிற்பாடாக, நிலுவையாக.
behold
v. பார், நோக்கித் தெரிந்துகொள், அறி, கவனி.
beholden
a. ஒருவருக்குக் கடமைப்பட்ட, நன்றிக் கடப்பாடுடைய.
behoof
n. நலன், பலன், ஆதாயம்.
behove
v. கடமையாயமை, ஏற்புடைத்தாயிரு, இன்றியமையாததாகு.
behowl
v. ஊளையிட்டு நையாண்டி செய், ஊளையிட்டு அவமதி.
beige
n. சாயமிடாத கம்பளித்துணி.
being
n. இருத்தல், இருப்பு, மெய்ம்மை, நிலைபேறுடைய ஒன்று, அமைப்பு, இயல்பு, உயிருரு, ஆள், பொருண்மை.
bejewel
v. அணிகளால் ஒப்பனை செய்.