English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
beg
v. இர, பிச்சைகேள், பிச்சையெடுத்துப் பிழை, வேண்டுஇரந்துகேள், மன்றாடு, குறையிரம, உண்மையென்று வைத்துக்கொள்.
begad
int. கடவுக்மேல் ஆணை.
began
v. என்பதன் இறந்தகாலம்.
begem
v. மணிக்கல் பதிக்கச்செய், இரத்தினக் கற்களைக் கொண்டு ஒப்பனை செய்.
beget
v. ஈன்றெடு, பெறு, தோற்றுவி, தோன்ற ஏதுவாயிரு, விளைவி.
begetter
n. தோற்றுவிப்பவர், தந்தை, தோற்றுவிக்கும் நிமித்த காரணம்.
beggar
n. இரவலர், பிச்சைக்காரர், வறியவர், ஏழை, கீழ்நலையினர், சிறியவர், (வின வறியராக்கு, இரவலர் நிலைக்குக் கொண்டுவர, வறிதாக்கு, போதாதாக்கு.
beggar-my-nesighbour
n. சீட்டாட்டவகை, ஒருவர்மற்ற எல்லாருடைய சீட்டுக்களையும் தன் கைவசப்படுத்திக் கொள்ளும் வரை ஆட்டம்.
beggardom
n. பிச்சைக்காரர் உலகு, இரவவர்குழாம்.
beggarliness
n. இரம்பாடு, நல்குரவு, இழிதகவு, அற்பத்தனம்.
beggarly
a. நலம்கூர்ந்த, அறிவுகுறைந்த, இழிந்த, அற்பத்தனமான, கஞ்சத்தனமான, பயனற்ற, (வினையடை) அற்பத்தனமாக.
begging
n. பிச்சையெடுத்தல், பிச்சைக்காரத் தொழில் (பெ) பிச்சைகேட்கிற.
begift
v. பரிசுகள் நல்கு.
begild
v. பொன்மெருகிடு, பொன் தகடு போர்த்து, பொன் வேய்.
begin
v. தொடங்கிவை, முதற்செயல் நிகழ்த்து, முதற்கண் எடுத்துக்கொள், புகுமுகஞ்செய், தோற்றுவாய்செய், செயல் தலைப்படு, தொடங்கு, பிறப்புறு, உண்டாகு, தோன்று, தோற்றங்கொள்.
beginner
n. தொடங்குபவர், பணி பயில்பவர், தொடக்கக் கல்வி கற்பவர்.
beginning
n. செயலாற்றத் தொடங்குதல், தோற்றுவாய், தொடக்கம், தோற்றக்காலம், கருமுதல், பிறப்பு, மூலவடிவம், மூலம்.
beginningless
a. தோற்றுவிக்கப்படாத, தொடக்கமற்ற.