English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
butteris
n. குளம்புசீவி, குதிரைக்கு இலாடமடிப்பவன், குளம்பு சீவுவதற்கு வைத்திருக்கும் கருவி.
buttermilk
n. மோர், வெண்ணெய் நீக்கப்பட்ட உறைபால்.
butterwort
n. பூச்சிகள் உண்ணுகிற பளபளக்கும் இலைகளைக்கொண்ட சதுப்பு நிலச்செடி.
buttery
-1 n. வீட்டுச் சரக்கறை, விடுதிச் சரக்கறை.
buttery-bar
n. தேறல் அறையின் கலவறையடுக்கு.
buttery-hatch
n. திறந்த மேல்பாதி வழியாகப் பொருட்கிடங்கினின்று பொருள்களை எடுத்துக் கொடுக்கப் பயன்படும் கதவு.
buttock
n. பிட்டம், உடலின் பின்புறத்தில் புடைப்பாக உள்ளபகுதி, மற்போரில் பிட்டத்தால் தள்ளுதல், (வினை) பிட்டத்தால் தள்ளு.
button
n. குமிழ்மாட்டி, சட்டைமாட்டுவதற்கான குமிழ்க் கொளாவி, பொத்தான், குமிழ், மரை, சுரை, மொக்குள், விரியாத காளான், பரு, மின்சார விற்குமிழ், சிறுதிறப்பொருள், நடித்து ஏமாற்றம் உளவாள், ஒரு சிறிது, (வினை) குமிழ்கொண்டு மாட்டு, இறுக மூடு, குமிழ் மாட்டி வைத்திணை.
Button centre
பொத்தான் நடுவம், பொத்தான் கடை
button-stick
n. பொத்தானுக்கு மெருகிடப் படைவீரர்கள் பயன்படுத்தும் சாதனம்.
button-through
n. முன்புறமுழுதும் குமிழ்மாட்டியிட்ட பெண்டிர் உடை.
buttoned
a. கொளுவி மாட்டப்பெற்ற, பொத்தான் பொருத்தப்பட்ட.
buttonhole
n. குமிழ்மாட்டி செருகும் துளை, பொத்தான் செருகும் துளைக் குரிய மஷ்ர், மலர்க்கொத்து, (வினை) பொத்தான் செருகும் துளைபோடு, ஓரத்தைப் பாதுகாக்கத்தக்க தையல் போடு, பேச்சின் போது பிடித்து நிறுத்திவை.
buttonhook
n. பொத்தானைத் துளைக்குள் மாட்டி இழுக்கும் கொக்கி.
buttonless
a. கொளுவியற்ற, பொத்தான் இல்லாத.
buttons
-1 n. தோள் வார்ப்பட்டையணிந்த பணியாள்.
buttons(2),
pl. ஆட்டுச் சாணம், பிழுக்கை.
buttony
a. பல பொத்தான்களையுடைய, பொத்தானைப் போன்ற.
buttress
n. சுவர் தாங்கி, சுவர்அணை, உதைகால், ஆயக்கால், (வினை) முட்டுக்கொடு, அண்டை கொடு, தாங்கு, ஆதரவு கொடு.
buttress-root
n. தாங்கும் வேர், உதவி வேர், பின் தோன்றும் வேர்.