English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
burglar
n. வீட்டுக்குட்புகுந்து திருடுபவன், கன்னமிடுபவன், (வினை) வீட்டிற்புகுந்து திருடு, கன்னம் வைத்துத் திருடு.
burglarious
a. கன்னம் வைக்கிற, வீட்டை உடைத்துத் திருடும் பழக்கமுள்ள.
burglary
n. கன்னம் வைத்தல், வீடுபுகுந்து திருடுகை.
burgle
v. கன்னம் வைத்துக் களவாடு, வீடுபுகுந்து திருடு.
burgomaster
n. ஆலந்து-செர்மனி-பிளாண்டர்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள நகரச்சட்ட முதல்வர்.
burgonet
n. கன்னங்களைக் காக்கும் ஒட்டுப் பொருத்துடைய முன்னாளைய எஃகு தலைக்கவசம்.
burgoo
n. (கப்.) கப்பலோட்டியின் கஞ்சி உணவு, கூழ், அமெரிக்க நாட்டு மனைப்புறவிருந்திலே பயன்படுத்தப்படும் சூப்பி, கறிக்குழம்பு.
burgrave
n. கோட்டை நகரத்தின் குடிமரபான ஆட்சியாளர்.
burgundy
n. பிரஞ்சுநாட்டுப் பர்கண்டி எனும் மாவட்டத்தில் வடிக்கப்படும் முந்திரித்தேறல் வகை.
burhel
n. வருடை, இமயமலையில் வாழும் கானாட்டு வகை.
burial
n. மண்ணுக்கடியில் புதைத்தல், புதைவினை, இழவு வினை.
burial-ground, burial-place
n. கல்லறை, இடுகாடு.
burial-service
n. இறந்தவர் பொருட்டு இறுதியாக நடத்தப் படும் வழிபாடு.
Buridans ass
n. சரிதொலை இரு நல் உணவுக்கிடையே ஒன்று தேரமுடியாமல் பட்டினிகிடந்திறந்ததாகக் கூறப்படும் கழுதை, தேர இயலாது கெடுபவர்.
burin
n. செப்புத் தகட்டில் செதுக்குவேலை செய்யப் பயன்படும் கருவி, செதுக்கு வேலைக்காரருடைய தனித் தன்மையான பாணி.
burinist
n. செதுக்குவேலைக்காரர், உலோகத்தகடுகளிற் செதுக்கு வேலை செய்பவர்.
burke
v. திக்குமுக்காட வைத்துக் கொல், சந்தடியின்றி அடக்கிவை, வெளித் தெரியாமல் மூடிமறை, முழு முடாக்குச் செய்.
burl
n. நுல் முடிச்சு, கம்பிளிநுல் சிக்கு, மரங்களின் சுரணை, (வினை) சிக்ககற்று, முடிச்சு நீக்கு.
burlap
n. கரடுமுரடான திரைச்சீலை, பருக்கன் துணிவகை.
burlesque
n. கிண்டல், போறல் நையாண்டி, நகைவசைச் செய்யுள், (பெ.) கேலியான, நையாண்டித்தன்மையுள்ள, நகைத்திழிவுபடுத்தத்தக்க, (வினை) நையாண்டி செய், நகைத்திறங்கூறு.