English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bunt
-1 n. முட்டுதல், தள்ளுகை, தளக்கட்டுப்பந்தாட்டத்தில் உட்களம் நோக்கிய சிறு பந்தெறி, விமானத்துறையில் அரை வட்டணித்து அரக்கரணமிடல், (வினை) கொம்பெறி, முடடு, குதி, துள்ளு, மட்டையைசன் சுழற்றாமல் பந்தைத் தட்டி நிறுத்து, விமானத் துறையில் அரைவட்டணித்து அரைக்கரணமிடு.
bunted
a. கோதுமைப்பயிரில் நோய்வகைக்கு உள்ள.
bunter
n. கந்தல் பொறுக்கி, கீழ்த்தரபெண்.
bunting
-1 n. மென்கம்பிளியாலான கப்பற் கொடித்துணி, கப்பற்கொடி, துகிற்கொடி, அழகு ஒப்பனைக்குரிய கொடிச்சிலை.
buntline
n. கப்பலின் சதுரப்பாய் தொய்வுற்று மடிப்புறாமலிருக்க நடுவே கட்டப்படும் கயிறு.
bunty
a. கோதுமையில் நோய்வகைக்கு உள்ளான.
bunya, bunya-bunya
n. கொட்டைகள் ஈனும் ஆஸ்திரேலிய முன் மரவகை.
bunyip
n. ஆஸ்திரேலியப் பழங்கதைகளுக்குரிய சழுப்பு நிலப் பேருருவ விலங்குவகை, ஏமாற்றுபவர், மோசடிக்காரர்.
buoy
n. மிதவை, கடலில்வழிகாட்டியாகவும் எச்சரிப்புபக் கருவியாகவும் பயன்படும் மதிப்பு அடையாளக்கருவி, (வினை) மிதவைகள் ஏற்பாடுசெய், மிதவைமுலம் அடையாளம் அறிவி, மிதக்கச் செய், மேலெழச்செய், மேலெழு, குதிதுள்ளு, மித, ஊக்கு.
buoyage
n. மிதவை அமைப்பு, மிதவை ஏற்பாடு, மிதவை வரிசை.
buoyance, buoyancy
நீரில் மிதக்கும் பண்பு, மிதப்பாற்றல், மிதக்கச் செய்யும் திறம், காற்றில் எழும் திறம், பளுவின்மை, நீர்மத்துள் அழுத்தலால்எடை குறைவாகக் காணும் இயல்பு, கிளர்ச்சி மன எழுச்சி.
buoyant
a. மிதக்கிற, மிதக்கும் ஆற்றலுள்ள, நொய்ம்மையான, மகிழ்ச்சி மிக்க, நீட்டிப்பாற்றலுள்ள.
bur
-1 n. உடையில் அல்லது உடம்பில் ஒட்டும் கொக்கிகளையுடைய விதைக்கூடு, ஒட்டுமுள்விதையுறை, ஒட்டுமுள்மலர், பூச்சி முள், ஒட்டுச்சளி, விடாது ஒட்டிக்கொள்பவர், விடாது ஒட்டி வாழ்பவர், விடாக்கண்டர், விடாக்கட்டை, மரத்தின் கரணை, மான் கொம்பின் அடித்திரடு, நுல் சரடு, கழிவுப்பட்டு நுல், செதுக்குவேலையில் கோட்டின் சொரசொரப்பான விளிம்பு, வயிற்றுச்சுறப்பி வகை, கணையம், கொல்லத்துவேலைக்கரண்டி,உலோகத் தகட்டில் துலையிடும் போது வெளியே தள்ளப்பட்ட பகுதி, பாதி பளபளப்பாக்கப் பட்ட செங்கல்.
bur-reed
n. (தாவ.) பந்து போன்ற மலர்க்கொத்துக்களை உடைய நீர்வாழ நாணற் செடிவகை.
bur-thistle
n. (தாவ.) ஒட்டிக்கொள்ளும் முட்செடி வகை.
Burberry
n. நீர்தோயா மேற்சட்டை, 'பர்பெரி' கம்பெனியார் செய்யும் ஒருவகை மேற்சட்டை.
burble
-1 n. சிக்கல், குழப்பம், (வினை) குழப்பமாக்கு, தாறுமாறுக்கு.
burbot
n. விலாங்குமீன் போன்று தட்டையான தலையும் கீழ்த்தாடையில் நீண்ட மெல்லிய தாடிபோன்ற அமைப்புமுடைய நன்னீர் மீன்வகை.
burdash
n. குஞ்ச அருகுடைய முற்கால ஆடவர் அரைக்கச்சை வகை.
burden
-1 n. பாரம், சுமை, பளு, கப்பலில் சரக்கேற்றிக் கொள்ளும் அளவு, பொறுப்பு, கடமை, கடப்பாடு, மேற்கொண்டு தீரவேண்டிய செலவு, விலலங்கம், (வி.வி) தெய்வமொழி, துன்பு செறி ஊழ், துயரம், இடுக்கண், பல்லவி, இடையிடையிட்டு மீண்டும் மீண்டும் பாடப்படும் பாடல் பகுதி, முக்கிய செய்தி, அடுத்தடுத்துக் கூறப்படுவது, ஏட்டின் சாரம், (வினை) சுமை ஏற்று, பொறுப்புச்சுமத்து, அழுத்து, தொல்லைக்காளாக்கு, வில்லங்கப்படுத்து.