English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bung-hole
n. தக்கையால் அடைக்கப்படும் மிடாத்துளை.
bung-vent
n. உட்காற்றை வெளியேற்ற உதவும் மிடாத்துளையிலுள்ள சிறு புழை.
bungaloid
a. எளிய மாளிகை போன்ற, சுற்றுத் தாழ்வாரத்தோடு கூடிய.
bungalow
n. (இ.) சுற்றுத் சுற்றுத் தாழ்வாரத்தோடு கூடிய, ஓரடுக்கு வீடு, ஒற்றைமாடி இல்லம்.
bungle
n. செயற் குளறுபடி, அரைகுறைச் செயலாண்மை, அரைகுறைவான நயமற்ற செய்பொருள், (வினை) குளறுபடி செய், திறமையின்றித் தவறு இழை, அரை குரை வேலை செய், அருவருப்பாக நடந்து கொள்.
bungler
n. நயமற்ற தொழிலாளி, தவறு இழைப்பவர், அருவருப்பாகச் செயலாற்றுபவர், குழப்பி வடுபவர்.
bungling
a. செயற் குளறுபடி, பரும்படி வேலை, குழப்பவேலை, (பெ.) குழப்பமான, அருவருப்பான, நயமிலா, தவறான, அலங்கோலமான.
bunglingly
adv. அலங்கோலமாக, தவறாக, நயமில்லாமல்.
bunion
n. கால் வீக்கம், காற்பெருவிரலின் முதற்கணுவின் வீக்கம்.
bunk
-1 n. கப்பல் அறையிலுள்ள ஒதுக்கிடம், அடைப்பிட இருக்கை, துயிலிடம், (வினை) கப்பல் அறையிலுள்ள ஒதுக்கிடத்தைப் பெற்றமர், துயிலிடத்தைக்ககொள்ளு.
bunker
n. கப்பல் எரிபொருள் அறை, கப்பல் கரித்தொட்டி, குழிப்பந்தாட்டத்தில் பந்து ஒட்டத்தைத் தடைப்படுத்தும் மணற்குழி, (படை.) குண்டுவீச்சுக்காலப் பாதுகாப்பிடம், குண்டு காப்பரண், (வினை) விறகூட்டு, எரிபொருளுட்டு, எரி பொருளாயுதவு, குழிப்பந்தாட்டத்தில் குழியிடத்தில் பந்தைச் செலுத்து, இடரில் சிக்கவை.
bunkered
a. குழிப்பந்தாட்டததில் குழிப்பட்ட, இடர்ப்பட்ட.
bunko
n. நம்பிக்கை மோசம் செய்து பொருள் பறித்தல், (வினை) ஆசை காட்டிஏமாற்றி இட்டுச்சென்று பொருள் பறி.
bunko-steerer
n. ஆசைகாட்டி ஏமாற்றும் குழுவினர்.
bunkum
n. புரட்டு, பித்தலாட்டம், மடக்கடி.
bunnia
n. (இ.) வணிகர், கடைக்காரர்.
bunny
n. குழந்தை வழக்கியல் முயல்குறித்த செல்லப்பெயர்.
bunny-hug
n. அமெரிக்கநாட்டு நடன வகை, (வினை) அமெரிக்கநடனமாடு.
bunodont
a. புண்ணுள்ள கடைவாய்ப் பற்களையுடைய.
Bunsen
a. ஆர்.டப்ள்யூ.பன்சென் என்ற செர்மனிக்கு விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட.