English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bulbul
n. (அரா.) இனிமையாகப் பாடும் பறவைவகை, பாடகர், கவிஞர்.
bulge
n. வீக்கம், புடைப்பு, இடைவளர்ச்சி, தற்கால மிகை பாடு, (வினை) புடை வீங்கு.
bulger
n. புறக்குவிந்த முகப்பை உடைய குழிப்பந்தாட்ட மட்டை.
bulginess
n. புடைத்த நிலை, வீக்கம்.
bulgy
a. புடைத்த, வீங்கிய.
bulimia, bulimy
(மரு.) திராப் பசிநோய், ஆனைப்பசி, பேரூண்வேட்கை.
bulk
-1 n. பேரளவு, பெரும்பகுதி, பரும் அளவு, திரள், பேருருவம், பெரும் பிண்டம்,புகையிலைப் பெருங்தொகுதி, கப்பல் ஏற்றிச்செல்லும் சரக்கு, வயிறு, பெட்டி, உடல் நடுப்பகுதி, கப்பலின் அடிப்பாகம், கப்பலின் உடற்பகுதி, (வினை) பேரளவுடையதாகத் தோன்று, மிகைபடத்தோன்று, குவி.
bulker
n. தெருக் கள்வன், தெருக்கேடி, விலைமகள்.
bulkhead
n. கப்பலின் கண்ணறை, கப்பல் அறைத்தடுப்பு, அறைக்கூறு, தடுப்பறை, சாவடி, கடைமுகப்புமோடு, கடைமுகப்பு.
bulkiness
n. புடைப்பு, பருமன, பேரிடமடைக்கும் பண்பு.
bulky
a. பெருத்த, பருமனான, பாரித்த, இடம் பெரிது அடைக்கிற.
bull
-1 n. ஆனேறு, விடைஎருது, விதையகற்றப்படாத காளை, யானை-திமிங்கலம் முதலியவற்றின் ஆண், இடபஇராசி, எருத்து வான்மனை, பொருள்களின் விலையை ஏற்றுபவர், பங்கு மதிப்பேற்றுபவர், இலக்குக்குறி மையம், இலக்குமைய வேட்டு, (பெ.) ஆண்மையுடைய, பெருத்த, திரண்ட, மதிப்பு உயர்த்துகிற, விலை உயருகிற, (வினை) விலை வாசிகளை உயர்த்து, ஆணினத்துடன் இணைந்து கூடு, ஆனேற்றின் இணைவு ஆவாவு, ஈத்தளை.
bull-baiting
n. எருதுவேட்டை, நாய்களை எருதின்மீது தூண்டிவிட்டுப் போர் செய்யவிடல்.
bull-beef
n. எருது இறைச்சி, முரட்டுமாட்டு இறைச்சி.
bull-bitch
n. விடாப்பிடியும் அச்சுறுத்தும் தோற்றமும் உடைய பெருநாயின் பிணவு.
bull-board
n. கப்பலில் ஆடப்படும் சாய்தட்டாட்டத்துக்குரிய ஆட்டப்பலகை.
bull-calf
n. காளைக்கன்று, அறிவிலி, மடையன், பாங்கற்றவன்.
bull-dance
n. ஆண்கள் மட்டும் ஆடும் ஆட்டம்.
bull-head
n. பெருந்தலையுள்ள சிறுமீன் வகை.