English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bugaboo
n. அச்சுறுத்தி, பூச்சாண்டி.
bugbane
n. பூச்சிகளை அண்டவிடாமல் விரட்டும் தன்மை வாய்ந்த செடிவகை.
bugbear
n. அச்சுறுத்தி, பூச்சாண்டி, (பெ.) அச்சுறுத்துகிற.
bugger
n. சட்டத்திற்கு முரணாக நடக்கும் இயல்புடைய பல்கேரிய முரண் சமயக் கோட்பாட்டாளர், இயற்கைக்கு மாறான புணர்ச்சிப் பழக்கங்கள் உள்ளவர், விலங்குத்தன முடையவர், கயவன், பேர்வழி, பயல், (வினை) அலைந்துதிரி, கிடந்தலை.
buggery
n. இயற்கைக்கு மாறான புணர்ச்சிப்பழக்கம்.
buggy
n. இலேசான சிறு ஒற்றைக்குதிரை வண்டிவகை.
bughouse
a. பித்துப்பிடித்த.
bugle
-1 n. எக்காளம், படைத்துறை அடையாள ஒலிப்பாகப் பயன்படும் பித்தளை உலோகத்தால் செய்யப்பட்ட எக்காளம்,வேட்டைக்காரர் ஊதுகொம்பு, வேட்டைக்காரர் கொம்புக் கலம், (வினை) எக்காளம் முழுங்கு, கொம்பு ஊது.
bugle-band
n. எக்காளம் வாசிக்கும் இசைக்குழு.
bugle-call
n. எக்காள ஒலி, ஊதுகொம்பு முழக்கம்.
bugle-horn
n. குவளை, பருகப் பயன்படுத்தப்படும் கொம்புக் கலம், வேட்டை ஊதுகொம்பு.
bugle(3(
n. (தாவ.) நீல மலர்களைக் கொண்ட படரும் செடி வகை.
bugler
n. எக்காளம் இசைப்பவர், உயர் படைத்துறைப் பணியாட்களின் கட்டளைகளை எக்காள ஓசைமூலம் அறிவிப்பவர்.
buglet
n. சிறு எக்காளம், சிறு ஊதுகுழல்.
bugloss
n. (தாவ.) வயல்களில் உண்டாகும் களைச் செடி வகை.
bugong
n. ஆஸ்திரேலிய மக்கள் உணவாகப் பயன்படுத்தும் இறைச்சி வகை.
buhl
n. ஆமையோட்டில் உட்செதுக்கிய பல்வண்ணப் பொன்மனி உலோக வேலைப்பாடு, (பெ.) ஆமையோட்டில் பல் வண்ணப் பொன் வெள்ளி உலோக வேலைப்பாட்டுடன் உட்செதுக்கிய.
buhrstone
n. திரிகையாகப் பயன்படும் ஒருவகைப் படிகக் கல், பலம வெற்றறைகளைக் கொண்ட சொரசொரப்பான படிகக்கல்.
build
n. கட்டமைப்பு, கட்டுமானப்பாங்கு, கட்டமைதி, உடல் அமைப்பு, (வினை) கட்டு, கட்டியெழுப்பு, இணைத்துருவாக்கு, அமை, வீடுகட்டு, கூடுகட்டு, மீது எழுப்பு, அடிப்படையாகக் கொள், படிப்படியாக உருவாக்கு, முஸ்ன்று பேணிவளர்.
build-up
n. சிறிது சிறிதாகக் கட்டியமைத்தல், கட்டுமானத்தொகுதி, கட்டுமான அளவு, செயற்கைப் புகழ், உண்டு பண்ணுகை, பேச்சுக்களிலும் கதைகளிலும் உணர்ச்சி முகடு நோக்கிய கட்டமைவு.