English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bramble-berry, bramble-bush
n. அடர்ந்த முட்புதர் வகை.
bramble-finch, brambling
மலைப்புள் வகை.
brambly
a. முட்புதருடைய, முள்ளடர்ந்த.
bran
n. தவிடு, கூலக்குப்பை, குத்துமி.
brancard
n. (பிர.) குதிரை படுக்குமிடம்.
branch
n. கிளை, கொப்பு, பகுதி, பக்கம், கூறு, பிரிவு, கிளையாறு, கிளையினம், கிளைநிலையம், துணைநிலையம், தலைப்பின் உட்பிரிவு, நுல்துறை, கலைத்துறை, தொழில் துறை, (வினை) கிளைகளாகப்பிரி, கப்புக் கவர்விடு, கிளைவிட்டுப்பரந்துசெல், பிரி, விலகு, பிரிந்து செல்.
brancher
n. கூட்டை விட்டுக் கிளை வாழ்வை மேற்கொண்ட சிறு பறவை.
branchery
n. கப்புக்கவர், கிளைகளின் தொகுதி.
branchial
a. செவுள்சார்ந்த.
branchiate
a. செவுள்களுடைய.
branching
n. கிளைவிடல், (பெ.)கிளைவிடுகின்ற, பிரிவுப்ள் கொண்ட.
branchless
a. கிளைகள் அற்ற,பிரிவுப்ள் அற்ற.
branchy
a. பல கிளைகளுள்ள, பல பிரிவுகளைக்கொண்ட.
brand
n. கொள்ளிக்கட்டை, கரிக்கட்டை, சூட்டுக்கோல், சூடிட்டதழும்பு, சூட்டுக்குறி, சூடாக்கிப்பொறிப்பிடுவதற்கான இரும்பு அச்சுரு, சூடு முத்திரை, தொழிற்சின்னம், வாணிகப்பொறிப்பு, தர அடையாளம், தரவகை, பண்புவகை, நயவகை, ஒளிமிக்க வாள், பளபளப்பான கத்தி, இழிவுக்குறி, பயிர்வெப்ப நோய், (வினை) சூடிடு, நிலையாக அடையாளமிடு, நிலயாகக் குறித்துவிடு, நினைவில் இருத்து, அறிவுறுத்து, தீக்குறியீடு, இகழ்குறி, இடுக்குண்டாக்கி, கறைப்படுத்து, வசைகூறு.
brand-new
a. புத்தம் புதிய, அறப்புதிதான, புதுப்பளப்பளப்புடன் கூடிய.
branded
a. சூடிட்ட, தொழிற்குறி உடைய, பழிசுமத்தப்பட்ட, குறிக்கப்பட்ட.
brander
n. கம்பி அடுப்பு, உணவு சமைக்கும் இருப்புக்கலம், (வினை) கம்பியடுப்பில் உணவு சமை.