English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
brain-wash, brain-washing
n. கருத்துமாற்றத்துக்கான வன்பிடிப்போதனை, குற்றஏற்புக்கான வன்பிடிச் சித்தத்தாக்குதல்.
brain-wave
n. கருத்தொளி, திடீர்ப்புதுக் கருத்தலை அறிவு மலர்ச்சி.
brainchild
n. புதுமைக்கருத்து, புதுத்திறப்பணி.
brained
a. மூளைவாய்ந்த, மூளைத்திறமுடைய, அறிவுடைய.
brainfever
n. மூளைக்காய்ச்சல், மூளையதிர்ச்சி, மூளைஅழற்சி மயக்க வெறி, வெறிப்பிதற்றல்.
brainless
a. மூளை இல்லாத, அறிவற்ற, மடத்தனமான.
brainy
a. மூளை நலம் வாய்ந்த, நுண்மதியுடைய, திறமை மிக்க.
braird
n. முதல் முளை, குருத்து, (வினை) குருத்துவிடு, முதல்முளைவிடு, மண்ணிற்குமேல் தோன்று.
braise
v. மேலும் கீழும் நெருப்பிட்டு ஆட்டு இறைச்சியோடு பன்றி இறைச்சித் துண்டுகளைப் புழுக்கு, கனல் வேவலாக அளி.
brake
-1 n. தடுப்புக்கருவி, முட்டுத்தனத்தை, (வினை) தடுத்துநிறுத்து, தடைபோடு, முட்டுக்கட்டையிடு.
brake-block
n. முட்டுக்கட்டை, விசைத்தடுப்புப் பொறியாகப் பயன்படும் கட்டை.
brake-shoe
n. தடைப்பொறியின் உராய்வுக்குரிய பகுதி.
brake-van
n. புகைவண்டியின் தடுப்புப்பொறி அமைக்கப் பட்ட வண்டி.
brake-wheel
n. தடைப்படு சக்கரம்.
brake(y), v. break
என்பதன் இறந்தகால-முடிவெச்ச வடிவம்.
brakeless
a. தடுப்புக் கருவியற்ற.
braky
a. புதர்காடான, புதர் நிரம்பிய.
Bramah-press
n. ஜோசப் பிரன் என்பவரால் புனைந்து காணப்பட்ட நீர்வலங் கொண்ட அழுத்தக்கருவி, நீரின் ஆற்றலால் வேலை செய்யும் அழுத்தக்கருவி.
bramble
n. கருப்புப் பழங்களைப் கொண்ட முட்செடி வகை, கள்ளிபோன்ற முள்ளடர்ந்த நீண்ட படர்தண்டுடைய புதர்வகை.