English Word (ஆங்கில வார்த்தை)
Tamil Word (தமிழ் வார்த்தை)
bohemianism
n. நாடோடித்தன்மை, மரபொழுங்கின்மை.
bohemianize
v. சமுதாயக் கட்டுப்பாடில்லாமற் செய்வி,
boil
-1 n. பரு, கொப்புளம், குருதிக்கட்டி.
boiler
n. வேம்பா, வாலை, இயந்திரக் கொதிகலம், வெள்ளாவி விடும் சால், சினம் கொள்பவர், வேகவைப்பதற்கேற்ற காய்கறிவகை.
boiler-iron
n. திரணைக்கம்பி.
boiler-tube
n. கொதிகல உட்காற்றுக்குழாய்.
boiling
n. கொதிப்பு, கொதித்தல், (பெ.) கொதிக்கிற, கொதிநிலையான, கொதிநிலைக்குரிய.
boisde rose
n. (பிர.) தவிட்டு நிறத்தின் பலபடி வண்ணச் சாயல்கள்.
boisterous
a. பேரிரைச்சலான, கொடிய, கொந்தளிக்கிற கீழ்ப்படியாத, கிளர்ச்சியுடைய.
boisure
n. கோட்டைமதிற்சுவர் அல்லது கைப்பிடிச்சுவரின் முடிங்கிய கோணப்பகுதி, பெருமக்களின் குடும்பச் சின்னங்களில் இனமரபுக் கிளை உறவுப்ளைக் காட்டும் வேறுபாடு.
bok
n. வெள்ளாடு, மானியல் ஆடு.
bok-rest
n. மேசைமீது வைப்பதற்குரிய புத்தகந்தாங்கி.
bolas
n. எறிபடைக்கண்ணி, வேட்டைவிலங்கின் உறுப்புக்களில் மாட்டிப்பிணிக்கும் இழைகுண்டு எறிபடை.
bold
n. துணிவுள்ள, தீரமிக்க, திண்ணிய, உரமுடைய, ஆணவமிக்க, தன்னம்பிக்கையுடைய, நாணமில்லாத, அடக்கமற்ற, வரம்புமீறிய, எடுப்பான, முனைப்பான, புறப்புடைப்பான, எளிதில் புலப்படத்தக்க, முயற்சி குன்றாத, செயலுக்கமுடைய, மேடான, செங்குத்தான, திடுமென்ற.
Bold italics
தடித்த சாய்வு
bold-faced
a. ஆணவமான, அச்சில் தடித்த தோற்றமுள்ள.
bole
-1 n. அடிமரம், அடித்தண்டு.
bolection
n. வார்ப்படப் புடைப்புச் சித்திரம், (பெ.) வார்ப்படப்புடைப்பான.
bolero
n. (ஸ்பா.) ஸ்பெயின் நாட்டு நடனம், பெண்களின் குறுஞ்சட்டைவகை.
bolide
n. பெரிய வால்மீன், எரிப்பந்து.